|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

28 February, 2013

இணை பிரியா காதல்!


ஏன் இந்த பழக்கம்!


பவுர்ணமியில் கிரிவலம் ஏன்?


நிலவின் ஒளிக்கு சில அபூர்வ ஆற்றல்கள் உண்டு. பயிர், செடி, கொடி, மூலிகைகள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான சக்தியை அது தரும். ஓஷதீநாம் பதி: என்று சந்திரனுக்குப் பெயருண்டு. இதற்கு தாவரங்களின் தலைவன் என்று பொருள். நிலவொளி நம் மீது பட்டால் அறிவு பலப்படும். மனக்குழப்பம் நீங்கும். மற்றைய நாளை விட தெய்வீக சக்தி மிக்க மலைகளுக்கு பவுர்ணமியில் சக்தி அதிகரிக்கும். பவுர்ணமி கிரிவலத்தால் தெய்வ அருள், மூலிகைக் காற்றால் உடல்நலம், நிலவொளியால் மனத்தெளிவு உண்டாகிறது. வலம் வருபவர்கள் இறைநாமத்தை உச்சரித்தபடி அமைதியாக வந்தால் பலன் இரட்டிப்பாகும்.

கென்ய சிறுவனுக்கு அமெரிக்காவில் பாராட்டு!



சிங்கங்களின் தாக்குதலில் இருந்து, பண்ணை மாடுகளை காப்பாற்ற, கென்ய சிறுவன், தந்திரமான வழியை கையாண்டு வருகிறான்.கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில் விலங்குகள் பூங்கா உள்ளது. இந்நகரில், பெரிய கட்டிடங்களை கொண்ட பகுதிகளில் கூட, சிங்கம், காண்டாமிருகம் உள்ளிட்ட வனவிலங்குகள், நடமாடும். நகருக்குள் வரும், சிங்கங்கள் அங்குள்ள பண்ணைகளில் புகுந்து, ஆடு, மாடுகளை சாப்பிட்டு விடுகின்றன. நைரோபி சேர்ந்தவன் ரிச்சர்டு டுரேரே, 13. சிங்கங்களிடம் இருந்து, கால்நடைகளை காப்பாற்ற, தந்திரமான வழியை கையாண்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளான்.

இது குறித்து ரிச்சர்டு கூறியதாவது: இரவில் நாங்கள் தூங்கும் சமயத்தில், பண்ணைக்குள் நுழையும் சிங்கங்கள், மாடுகளை கொன்று தின்று விடும். ஒரு முறை, கையில் டார்ச் லைட்டுடன், நான், பண்ணைக்கு அருகில் சென்றபோது, சிங்கங்கள் வெளிச்சத்தை கண்டு பயந்து ஓடுவதை கண்டேன். அசையும் விளக்கு வெளிச்சங்கள், சிங்கங்களை மிரட்டும் என்பதை கண்டுபிடித்தேன். அதன்பின், பண்ணையை சுற்றிலும், விளக்குகளை பொருத்தி, அவை அவ்வப்போது அணைந்து எரிவது போல, அவற்றுக்கு மின் இணைப்பு கொடுத்தேன். எனது "ஐடியா' வெற்றிகரமாக வேலை செய்தது. அதன்பிறகு, சிங்கங்கள், எங்கள் பண்ணைக்கு அருகே வருவதில்லை. இவ்வாறு ரிச்சர்டு கூறினான். சிறுவனின் புத்திசாலித்தனத்தை பாராட்டி, அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடைபெறும், கருத்தரங்கில் கலந்து கொள்ள, அவனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ராஜேந்திர பிரசாத் இறந்த தினம்

 இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் இறந்த தினம்(1963)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...