|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 February, 2017

விழி தமிழா...!


தமிழகத்தின் வளங்கள் எண்ணற்றது. அதில் முக்கியமும் முதன்மையானது நீர். அதிகளவில் தேவைப்படும் தமிழக குடிநீர் தேவையை கடல் நீரை சுத்திகரித்து செய்து கொள்ளலாம் (தமிழக அரசின் அம்மா மினரல் வாட்டர் கடல் நீர் சுத்திகரிப்பில் பெறப்படுவது தான்). மண்ணிற்கு தேவையான சத்துக்கள் ஏதும் இல்லா இந்த நீரை உழவிற்கு பயன்படுத்தவே முடியாது. புள்ளிவிவரப்படி தமிழகத்தில் ஆற்று நீர் குடிநீர் தேவையை விட உழவிற்கே அதிகம் பயன்படுத்துகிறோம். அதற்காகத்தான் காவிரி நீர் பங்கீட்டிற்கு தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறோம்.

1972-73ல் காவிரிச்சிக்கல் தமிழகத்தில் பூதாகாரமாய் தலைதூக்கவே 1974ல் காவிரிப் பாசன ஆணையம் முன்னெடுக்கப்பட்டு 1976 அன்றைய மத்திய நீர்ப்பாசன அமைச்சர் ஜெகஜீவன்ராமின் தலைமையில் வாரியம் அமைக்கப்பட்டது. ஆனால் அதற்குள் குடகு மலைப் பகுதியில் (காவிரி உற்பத்தியாகும் பகுதி) ஹிராங்கினி அணையை சத்தமில்லாமல் கட்டி முடித்தது கர்நாடகம். இதனை எதிர்த்து 1986ல் தஞ்சை உழவர் சங்கங்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வழக்கு தொடுத்தனர். இந்நிலையில் தான் உழவு உள்ள வரை தமிழகம் தண்ணீர் கேட்டுக் கொண்டே தான் இருக்கும். தமிழகத்தை உழவிலிருந்து வெளியேற்றிவிட்டால் மாநில நீர்த்தேவை குறையும் என முடிவெடுத்து மத்திய அரசை அமைதியாய் அனுகியது கர்நாடக அரசு. தேசிய கட்சிகள் கோலோச்சும் கர்நாடகாவின் இத்திட்டத்திற்கு செவிசாய்த்த மத்திய அரசு, 1980களின் இறுதியில் தமிழகத்தின் நெற்களஞ்சிய மாவட்டங்களில் மீத்தேன் எடுக்க ஆய்வுகள் மேற்கொள்ள ஆரம்பிக்கப்பட்டது (இதனை தஞ்சை பூர்வ உழவர்களைக் கேட்டால் சொல்வர்). ஆனால் இதனை நேரடியாக சொல்லாமல் மண்ணெண்ணை குழாய் அமைக்க வேண்டி ஆய்வு செய்யப்படுகிறதென ஆரம்பித்தது ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு தமிழக அரசிடம் சமர்ப்பித்தது. தமிழக அரசோ கூட்டணி தேசியக் கட்சி சொன்னவுடன் திட்டத்தை படித்துக்கூட பார்க்காமல் ஒப்புதல் வழங்கி மீத்தேனுக்கு பச்சைக் கொடி காட்டியது. இதில் கோரப்பட்ட டெண்டர் பத்தில் ஐந்து நிறுவனங்கள் கர்நாடகத்தைச் சேர்ந்தவை. இப்போது நெடுவாசலில் போடப்பட்டிருக்கும் ஜெம் லேப் நிறுவனம் கூட கர்நாடக பாஜ. MP மறைந்த திரு.மல்லிகார்சுனப்பாவுடையது.
விழி தமிழா. அழிவுத் திட்டங்களை எதிர்த்து நில். போராடு.
போராடாத எந்த ஒரு இனமும் விடுதலை அடைந்ததாக சரித்திரம் இல்லை.

26 February, 2017

இது யாரோட இந்தியா..இதுதான் இந்தியாவெனில் யாருக்கு வேணும் இந்த இந்தியா..?

ஆளும் வர்க்கமே சொரணை இல்லையா ?
வி ஐ பி களுக்கே இந்தியா…!!!
பாவனா -வுக்கு
பாவாடை கிழிந்தால்
பாராளுமன்றம் வரை எதிரொலிக்கிறது
நந்தினி
ஹாசினி -களுக்கு
கருவறுக்கப்பட்டாலும்
அது கிணற்றுக்குள்ளே மூடி மறைக்கப்படுகிறது …!!!
அம்பாணி, அதாணி
மல்லையா கடன் வாங்கினால்
அது தள்ளுபடி செய்யப்படுகிறது
இராமையா
மூக்கையா இராமசாமி -கள்
கடன் வாங்கினால்
தடியடி நடத்தி வசூலிக்கப்படுகிறது..!!!
அரசியல்வாதிகள்
ஆற்றுமணலை கொள்ளையடித்தால்
சுங்கச்சாவடிகள் சுதந்திரமாக திறக்கப்படுகிறது
அன்றாட காய்சிகள்
மாட்டு வண்டியில்
மணல் எடுத்தால்
மாட்டு வண்டிகள் சூறையாடப்படுகிறது..!
கல்வியை தொழிலாக்கி
அதை காசுக்கு விற்று
பணம் பார்க்கும் கபோதிகளுக்கு
கல்வி தந்தையென பட்டம் அளிக்கப்படுகிறது
தேர்விலே
பக்கத்தில் இருப்பவனை பார்த்து
காப்பி அடித்தால் மாணவனுக்கு
மூன்றாண்டு தேர்வெழுத தடைவிதிக்கிறது..!
போலி நாயகனுக்கும்
அரசியல் வாதிகளுக்கும்
சட்டத்தில் பல விதிவிலக்குகள் அளிக்கப்படுகிறது
சாமானியனுக்கோ சட்டம்
தன் கடமையை செய்கிறது..!
இயற்கையை அழிப்பவன்
இறைவனென போற்றப்படுகிறான்
இயற்கையை காக்க போராடுபவன்
தேசதுரோகியென தூற்றப்படுகிறான் .
ஆக இது யாரோட இந்தியா..இதுதான் இந்தியாவெனில் யாருக்கு வேணும் இந்த இந்தியா..?

கட்டமைக்கப்பட்ட இந்தியா என்ற போலி தேசத்தை தியாகம் செய்கிறோம்.


என்னதுக்குடா நாங்க தியாகம் பன்னனும்?
திருப்பதி கோவில் சுவரில் எழுதியிருக்கும் கல்வெட்டு சொல்லும் அந்த கோவில் யாருடையதுனு - தியாகம் செய்திருக்கோம்
கேரளாவில் பீர்மேடு யாருடையது - தியாகம் செய்திருக்கோம்
தண்ணி கொடுக்காதபோதும் நெய்வேலில இருந்து மின்சாரம் கர்நாடகாவுக்கு கொடுக்கிறோம் - தியாகம் செய்திருக்கோம்
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட எல்லாரையும் தமிழர்களுக்கு தெரியும் ஆனா 21 வருடம் செக்கிழுத்த வ.உ.சிதம்பரத்தை தமிழ்நாடு தாண்டி யாருக்காவது தெரியுமா? - தியாகம் செய்திருக்கோம்
கேரளாவில் குஜராத்தில் விரட்டப்பட்ட அணுஉலையை எங்க தலைல கட்டுணீங்க - தியாகம் செய்திருக்கோம்
பெங்களூர் உண்மையான பேர் தெரியுமா - தியாகம் செய்திருக்கோம்
நீங்க இலங்கைட்ட சீன் போடா கச்சத்தீவை கொடுத்தீங்க - தியாகம் செய்திருக்கோம்
மாநிலங்கள் பிரிக்கையில் 11% காடுகள் ஒதுக்கியபோது தமிழகத்திற்கு எத்தனை சதவீதம்னு தெரியுமா - தியாகம் செய்திருக்கோம்
தியாகத்தை பற்றி யாரிடம் பேசுவது என தெரிந்து பேசுங்கள்
இனி இந்தியாவை தியாகம்
செய்ய தயாராகிவிட்டோம்!
இந்தியா என்ற அண்டை நாட்டிற்காக தமிழர் நாடு கணக்கில் இல்லாத எண்ணற்ற தியாகங்கள் போதுமான அளவு கடந்த பல நூறு வருடங்களாக செய்துள்ளது...
எமது மண்ணின் வளங்களை போதுமான அளவு களவாடி இருக்கிறீர்கள்...
நெய்வேலி மண்ணை முழுமையாக நாங்கள் இழந்து மின்சாரம் உற்பத்தி செய்கிறோம் ஆனாலும் அந்த மின்சாரம் எங்கள் உரிமை அல்ல...
கடற்கரை முழுமைக்கும் அணு உலை பூங்கா என்று எங்கள் கடல் வளங்களையும்,எம் மண்ணையும் சிதைக்கிறீர்கள் நாங்களே இதுவரை தியாகம் செய்பவர்களாக இருந்து வருகிறோம்...
கச்சத்தீவை தியாகம் செய்தோம் மீன்பிடி உரிமை இழந்தோம்...
முல்லை பெரியாறு அணையை தியாகம் செய்தோம் தண்ணீர் எங்களுக்கு இல்லை...
நியூட்ரினோ, மீத்தேன் என்று எங்கள் நாட்டை இன்னும் தியாகம் செய்து வருகிறோம்...
எங்கள் ஆறுகளில் இருந்து எம் மண்ணை தியாகம் செய்து உங்கள் இந்தியாவை செழிப்புடன் இருக்கவைத்திருக்கிறோம்...
ஆகையால் ஒரே ஒரு முறை
நாங்கள் #கட்டமைக்கப்பட்ட_இந்தியா_என்ற#போலி_தேசத்தை_தியாகம் செய்கிறோம்.
தகவலுக்கு நன்றி
கார்த்திகேயன்

18 February, 2017

govtam@nic.in rajbhavantamilnadu@gmail.com

இந்த இரண்டு mail id க்குமே mail அனுப்புங்க...
TO : rajbhavantamilnadu@gmail.com
CC : govtam@nic.in
Subject : Requesting to conduct Re-election or Secrete Ballot
Dear Governor General Mr. Vidyasagar Rao,
This is to bring to your notice that I am very much worried on the way the polling has been conducted today in legislative assembly.
Though it has been requested many times by Mr.Stalin, The plea has been rejected by the honorable speaker Mr. Danapal.
We request you to urgently look into this issue and conduct a re-poll for the sake to save Tamilnadu from Corrupted Mannargudi mafias.
We also urge Central government to dissolve the government and give people the another chance.
Since the case regards to Live Telecast of legislative assembly meeting in front of honorable Supreme court , I request you to pressure Central government to finish the case soon and help Tamilnadu people the freedom to know what is happening in Legislative assembly.
Thanks and looking forward to your reply.
Jai Hind
Thank you,

08 February, 2017

அண்ணா முதல் ஓ.பன்னீர்செல்வம் வரை


தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க பொதுச்செயலாளர் சசிகலா இடையே  ஏற்பட்டுள்ள பிரச்னை போல, குறிப்பிட்ட கால இடைவெளியில் திராவிட இயக்கத்தில் பிளவுகளும், பிரிதல்களும் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.  நீதிக்கட்சியில் பெரியார் இணைந்த பிறகு தீவிர முற்போக்கு இயக்கமாக அதை முன்னெடுத்தார். அதனால் அதில் முன்னோடியாக இயங்கிய ஜமீன்தார்களும், பணக்காரர்களும் அதை இடையூறாகக் கருதி வெளியேறினர். ஆனால் அது பெரிய பிளவாகவோ அந்த இயக்கத்துக்குத் தொய்வாகவோ இருக்கவில்லை. அதேசமயம் அந்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறிய பின்னர் அதில் உருவான சில பிரிவுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது உண்மை.

பெரியார் - அண்ணா
தந்தைப் பெரியாருடன் சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள் அண்ணாவுக்கு இருந்தது. 1948-ல் முதல் இந்திய சுதந்திர தின விழாவினை ‛கறுப்பு நாள்’ எனப் பெரியார் தன் கட்டுரையில் குறிப்பிட, அதே இதழில் 'இன்ப நாள் - இனிய நாள்' என அண்ணா கட்டுரை எழுதினார். அதன் பின்னர் தமக்கு உதவியாக இருந்த மணியம்மைக்கு சட்டரீதியான பாதுகாப்பு வழங்க அவரைத் திருமணம் செய்தார் பெரியார். இந்தத் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசித்து தனியாக இயக்கம் காண முடிவு செய்தனர். அதன்படி 1949-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி திமுக தொடங்கப்பட்டது.
அண்ணா- சம்பத்
திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணாவுடன் வெளியேறிய பெரியாரின் அண்ணன் மகன் ஈ.வி.கே.சம்பத், திமுக சார்பில் 1957-ல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். 1961-ம் ஆண்டு 'திராவிட நாடு' என்கிற திமுகவின் தனிநாடு கோரிக்கையில், அண்ணாவுக்கும் சம்பத்துக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சம்பத் வெளியேறினார். பின்னர் அவர் சிவாஜி கணேசன், கண்ணதாசன், பழ.நெடுமாறன் ஆகியோரை இணைத்து 'தமிழ்த் தேசியக் கட்சி ' என்ற அமைப்பை ஏற்படுத்தினார்.  1962-ல் அது சந்தித்த முதல் தேர்தலில் படு தோல்வி அடைந்தது.  அதன் பின்னர் அந்தக் கட்சியை காங்கிரசுடன் இணைத்துக்கொண்டார் சம்பத். 

கருணாநிதி - எம்ஜிஆர்
இந்தப் பிரிவுதான் மிகப்பெரியதும் இன்று வரை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் இருந்து வருகிறது. 1967-ல் அறிஞர் அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியைப் பிடிக்கிறது. அதன் பின்னர் இரண்டாண்டுகளில் அண்ணா மறைகிறார். அதற்கு அடுத்த நாளே, யார் பொதுச்செயலாளர், யார் முதல்வர் என்கிற பிரச்னைகள் ஒருசேர எழுகிறது.  இதில் அப்போது கல்வி அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியனுக்கும் கருணாநிதிக்கும் இடையே பிரச்னை எழுகிறது. பெரியார் தலையிட்டு சமரசம் செய்தும் நெடுஞ்செழியன் ஒப்புக்கொள்ளவில்லை.  

திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஒட்டுமொத்த ஆதரவும் கருணாநிதிக்கு இருந்தது.  அவர் கட்சியின் சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார். நெடுஞ்செழியனுக்கு அண்ணா வகித்த பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டது; கருணாநிதி தலைவரானர்.  வெகுவிரைவில் கட்சியின் அதிகாரங்கள் முழுக்க தலைவருக்கு இருக்குமாறு பொதுக்குழுவினை கூட்டி முடிவெடுக்கப்பட்டு நெடுஞ்செழியன் டம்மியாக்கப்பட்டார்.  
1971-ல் அரசைக் கலைத்து விட்டு பொதுத்தேர்தலை கருணாநிதி சந்திக்கிறார். அவருக்கு அவரது நண்பரும் நடிகருமான எம்ஜிஆர் முழு ஒத்துழைப்பு அளிக்கிறார். எம்ஜிஆர் திமுகவின் பொருளாளராகவும் இருந்தார். மிகப்பெரிய வெற்றியை அந்தந் தேர்தலில் திமுக பெறுகிறது.  அடுத்த ஆண்டு திமுகவின் கணக்குகளை பொது மேடையில் கேட்டதற்காக எம்ஜிஆர் திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். ஆனால் அந்த நடவடிக்கையை மக்கள் ரசிக்கவில்லை என்பதை அவருக்குக்  கிடைத்த  ஆதரவு காட்டியது. 75-ம் ஆண்டு மிசா சட்டத்தின் அடிப்படையில் திமுக கலைக்கப்பட்ட பின் அடுத்த 14 ஆண்டுகளுக்கு கருணாநிதியால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. 72-ம் ஆண்டே அதிமுக என்கிற கட்சியை தொடங்கிய எம்ஜிஆர் 77-ல் ஆட்சியைப் பிடித்து 87-ம் ஆண்டு சாகும் வரை ஆட்சி செய்தார். 
ஜானகி - ஜெயலலிதா
எம்ஜிஆர் காலமான உடன் நாவலர் நெடுஞ்செழியன் காபந்து முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் கட்சி உறுப்பினர்கள் இணைந்து எம்ஜிஆரின் மனைவி ஜானகியை முதல்வராகத் தேர்வு செய்தனர். ஆனால் அடுத்த 28 நாட்களிலேயே சட்டமன்றத்தில் அக்கட்சி எம்எல்ஏக்கள் ஒருவருக்கொருவர் அடித்து மண்டையை உடைத்துக் கொண்டனர். கட்சி ஜானகி அணி  - ஜெயலலிதா அணி என இரண்டாக பிரிந்தது. எம்ஜிஆரை பதவிக்காக மோரில் விஷம் வைத்து ஜானகி கொன்று விட்டார் என ஜெயலலிதா குற்றம் சாட்டினார். அரசியல் குளறுபடியை காரணம் காட்டி அன்றைய அதிமுக அரசு கலைக்கப்பட்டது. அதிமுகவின் பிரபல சின்னமான 'இரட்டை இலை'க்கு இரண்டு தரப்பும் உரிமை கோரியதால் அந்த சின்னம் முடக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற தேர்தலில் ஜானகி அணி படு தோல்வி அடைந்தது. அவர் அரசியலில் இருந்து ஒதுங்கிக்கொண்டார். ஜெயலலிதா தலைமையில் மீண்டும் அதிமுக செயல்படத் தொடங்கியது.
கருணாநிதி - வைகோ
'திமுகவில் செங்குத்தான பிளவு' என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 'தீக்கதிர்' ஏடு எழுதியது. அது எம்ஜிஆர் பிரிந்தபோது கூட இப்படிக் குறிப்பிடவில்லை. வை.கோபால்சாமி என்கிற வைகோ அக்டோபர் மாதம் 23-ம் தேதி நீக்கப்பட்டதை எதிர்த்து தமிழகத்தில் 5 பேர் தீக்குளித்து இறந்தனர். அந்தளவுக்கு பெரும் தாக்கத்தை அந்தக் கட்சியில் இந்த நீக்கம் ஏற்படுத்தியது. வைகோவின் பின்னாலும் மிகப்பெரிய இளைஞர் கூட்டம் கூடியது. அவரது பிரிவுக்கு பின்னர் உடனடியாக வந்த மயிலாப்பூர்,பெருந்துறை ஆகிய இரண்டு இடைத்தேர்தல்களில் அவரின் கட்சி போட்டியிட்டது. இதில் பெருந்துறையில் இரண்டாம் இடத்துக்கு வைகோவின் கட்சி வந்து ஆச்சரியமளித்தது. திமுக தன் முடிவுகளால் இன்னொரு எம்ஜிஆரை உருவாக்கிவிட்டது என்றே அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டனர். ஆனால் வைகோவினால் அதைத் தக்கவைக்கும் அளவுக்கு அரசியல் சூழல் ஏற்படவில்லை. 

சசிகலா - ஓ.பன்னீர்செல்வம்
தற்போது ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் முதல்வர் பன்னீர்செல்வத்துக்கும் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் தற்போது ஏற்பட்டுள்ள இந்த மோதல் பிரிவுக்கு வழிவகுக்குமா? அல்லது ஜெயலலிதாவைப்போல கட்சியைக் கைப்பற்றுவாரா? ஒருவேளை பிரிந்தார் என்றால் அதைப் பெரிய பிளவாகக் கருதும் அளவுக்கு இருக்குமா எனப் போகப்போகத்தான் தெரியும். 

06 February, 2017

சசிகலாவை கைது செய்யும் வரை சாகும் வரை உண்ணாவிரதம்!


அரசியல் சாசனத்தில் மாற்றம் வேண்டும்!


உன் அடையாளம் அழிக்கப்படும் போது கோவப்படு!

மோடி கோவை வருகையையொட்டி தமிழில் எழுதபட்ட மைல்கற்கள் பிடிங்கி எரியபட்டதால் தமிழர்கள் ஷிந்தியை அழித்தனர். உன் அடையாளம் அழிக்கப்படும் போது கோவப்படு!

பதவியேற்பதற்கு முன்னரே டுவிட்டரில் பதயேற்பு நடந்துள்ளது.


04 February, 2017

போட்டி நடக்குறது க்கு பின்னால?

FLIPKART - SNAP DEAL, SUN TV - VIJAY TV, CHENNAI SILKS - SARAVANA STORE இப்படிலாம் போட்டி நடக்குறது க்கு பின்னால பெரிய பெரிய கார்பொரேட் கம்பெனி இருக்கு தெரியுமா.. 

கச்சா எண்ணை

மற்ற நாடுகளில் கடலில் கலந்த கச்சா எண்ணையை எப்படி சுத்தம் செய்கிறார்கள் மற்றும் இந்தியாவில் எப்படி செய்கிறார்கள் என்று பாருங்க...

இதை விட கிழிக்க முடியாது!


OMG விழித்துக்கொள் தமிழா!

கோயமுத்தூர்க்கு வந்த சோதனை . நாளை தமிழகம் முழுவதும் வரும் விழித்துக்கொள் தமிழா! இனி இந்த அரசியல்வாதிகளை நம்பாதீர்கள்!

நம்ம ஆளுக்கு இதெல்லாம் தெரியுமா?


விதை விதைத்தவன்!


கொசு விரட்டிகளை விட கூடுதல் பயன்கள்!


கொசு விரட்டி திரவத்தை கடையில் வாங்கி, நம் வீட்டிலுள்ள மின்சாரத்தில் சொருகி வைத்து கொசுக்களை விரட்டுகிறோம்.
ஒருமுறை தீர்ந்தால் அந்த பாட்டிலை தூக்கி எறியாதீர்கள்.
அந்த பாட்டிலில் சிறிதளவு ஆரத்தி கற்பூரத் துண்டுகளையும், வேப்ப எண்ணையையும் கலந்து மீண்டும் உபயோகப் படுத்தலாம்.
கொள்ளைக்கார கம்பேனி காரர்களின் கொசு விரட்டிகளை விட, இதில் கூடுதல் பயன்கள் ஏராளம்.
நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் 50 மில்லி சுத்தமான வேப்ப எண்ணை விலை சுமார் ரூ10 மட்டுமே.
ஒரு மாதத்திற்கு
மொத்த செலவே ரூ 11 மட்டு்மே,
இரண்டாவது மிகப் பெரிய விஷயம், இது உடல் நலத்திற்கோ, சுவாசத்திற்கோ தீங்கு விளைவிக்காத இயற்கை எண்ணெய்.
கடையில் வாங்கும் கொசு விரட்டியில் "அல்லோத்ரின்" எனும் வேதிப் பொருள் கெடுதி விளைவிப்பதாகும்.
இதை விற்பவர்கள் இந்தியாவில் மொத்தம் நாலே நாலு உற்பத்தியாளர்கள்.
யோசியுங்கள், ரூ 65 பெறுமானமுள்ள இந்த வேதிப் பொருளை சுமார் 10 கோடி மக்கள் இந்தியாவில் மாதம் தோறும் வாங்குகிறார்கள்.
ஆக, மொத்த வியாபாரப் பரிவர்த்தனை வருடத்திற்கு ரூ 7800 கோடிகள்.
நான்கு கம்பெனிகளில் ஒரு கம்பெனி ஜப்பான் கூட்டுறவு, அந்நிய செலாவணியாக நம் பணம் அங்கே போகிறது.
இந்த வேதிப் பொருளை விற்று வரும் லாபப் பணத்தில்.... இந்தியில் சினிமா எடுக்கிறார்கள்.
மக்களை மயக்கிட, விளம்பர படங்களை எடுத்து அதை மக்களிடம் கொண்டு சேர்க்க, கோடி கோடியாக கொட்டுகிறார்கள்.
ரூ 65 விற்பனை விலையில் லாபம் 250%.
நீங்களே உங்கள் வீட்டில் வேப்பெண்ணை கற்பூரம் மூலம், தயார் செய்து கொண்டால், குறு நிறுவனங்களாகிய வேப்ப எண்ணெய் உற்பத்தி உயர்ந்து, நமது விவசாயிகள் பயனடைவார்கள்.
இந்த விஷயத்தை நமக்குத் தெரிவித்த முகம் தெரியாத அந்தப் பெண்மணியைப் பாராட்டுகிறேன்.



02 February, 2017

சட்டத்தை மாற்றுங்க.

10 லட்சம் சம்பாதிக்கிறேன், 3 லட்சத்துக்கு வரி கட்ட சொல்லிரீங்க சரி கட்டிட்டேன்.மீதி உள்ள ரூபாய்க்கு வீடு வாங்க போறேன்,அதுல்லையும் பத்திர பதிவுன்னு 14% வாங்குரிங்க,நகை வாங்க போறேன் அங்கேயும் வரி.சாப்பிட போறேன் அங்கேயும் வரி.மக்களை சாகடிச்சி புடுங்குரீங்க.கார் வாங்கும்போதே வரியும் சேர்த்து புடுங்குரீங்க அப்புறம் டோல்கேட்டுக்கு டோல்கேட் சுங்கம் வசூலிக்கிரீங்க...இப்படி எல்லாத்தையும் இந்திய நாட்டுக்காக சகிச்சிட்டு வரியை கொடுத்தா!நீ அதை தூக்கி கார்ப்பரேட் கம்பெனிக்கு லோன் கொடுப்பிங்க, கொஞ்ச வருஷம் கழிச்சி வராக்கடன்னு தள்ளுபடி பண்ணுவிங்கா!கோடி கோடியா சம்பாதிக்கிற கூத்தாடிகளுக்கு கோடி கணக்கில் வரி பணத்த செலவழித்து விழா நடத்தி விருது கொடுப்பிங்கலட்சம் கோடிகள் வராக்கடன் இருக்கே அதை மீட்க என்ன நடவேடிக்கை எடுத்ததிங்கனு கேட்ட புரியாத & புரிஞ்சுக்க முடியாதபடி ஒரு பதில் சொல்லுவிங்க,இதையெல்லாம் பார்த்தா எவனாவது முறையா வருமான வரி கட்டுவானா? பதுக்கத்தான் செய்வான்.முதலில் சட்டத்தை மாற்றுங்க. எல்லா சிஸ்டத்தையும்  மாற்றுங்க.


முருங்கை கீரை மகிமை!


புடிங்கிய ஆணிகள் போதும்!

நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக மட்டுமே பேசுவோம்..மற்ற மக்கள் பிரச்சனைக்கெல்லாம் நாங்கள் போராட மாட்டோம் ..நம்மை ஆளும் முதல்வரும் ,பிரதமரும் தெய்வ பிறவிகள் அவர்களை பற்றி பேசுவது ஒரு பாவச்செயல்.. அவர்களை பற்றி பேசினால் அது முறையா ? நுரையா? என்று பிதற்றுபவர்களெல்லாம் எல்லாம் தேசியவாதிகள் நீயூட்ரலாக பேசுகிறவர்களாம்..
சீமான் ,கோவன் ,திருமுருகன் காந்தி , கவுதமன் இவர்கள் வேறு வேறு இயக்கமாக இருந்தாலும் ஆளும் அரசுகள் செய்யும் மக்களை விரோத போக்கை தைரியமா தட்டி கெட்டவர்கள் ..அதற்காக பலமுறை சிறை சென்றவர்கள் ...இவர்களுக்கு அரசு தேச துரோக பட்டம் கட்டத்தான் செய்யும்...அரசு சொல்கிற அதே குரலை நீ எதுக்கு சொல்ற??? இன்றைக்கு கூட லாரன்ஸ் போலீஸ் நிலையத்திற்கு தீ வைத்தது மாணவர்கள் இல்லை..மக்களும் இல்லை என்று மொட்டையா சொல்லி விட்டு நகர்கிறார் ..https://www.youtube.com/watch?v=G17znB3VnMU&spfreload=10 ..இந்த நால்வர்தான் காரணம் என்ற தொனியில் பேசிவிட்டு நகர்கிறார் ..காவல் துறைதான் காவல்நிலையத்திற்கு தீ வைத்தது ..அரசு தான் இதற்கு காரணம் என்று சொல்ல தைரியம் இல்லை ..நீயெல்லாம் என்ன நடுநிலை வாதி ..உன்ன மாதிரி நடுநிலைவாதிகள் புடிங்கிய ஆணிகள் போதும் லாரன்ஸ் ..நீ அரசியலுக்கு வந்து எண்ணத்தை கிழிக்க போற ..கிளம்புங்க உங்க நடுநிலையை ஆந்திர பக்கம் போய் காட்டுங்க

ராதா ராஜனை கலாய்க்கும் சீமான்!


சசிகலாவின் உண்மை முகம்!


உண்மையை உரக்க சொல் !


செய்வோமா ?


கன்னடர்கள் காசோலையை கன்னட மொழியில் எழுதி இந்தி வங்கிகளை திணறடிக்கிறார்கள். தமிழர்களும் இவ்வாறே செய்தால் தமிழ் படித்தவர்கள் மட்டுமே தமிழக வங்கியில் பணிபுரிவார்கள். செய்வோமா ?

ஈகோ இல்லாத CM!


அரிய கலை அதிசயம்!!


வரலாறு_தெரிந்துக்கொள்வோம்!


01 February, 2017

தமிழ் நாட்டின் மர்மமான இடங்கள்


மனிதர்களை தவிர அனைத்து உயிரினங்களும் தன் இனத்தை காப்பதில் சிறப்பு !!


மனைவி என்றால் உலகத்தில் உள்ள அத்தனை பயலுகளுக்கும் பயம் தான் போல!


போராளிகளுக்கு சிறையில் நடந்த கொடுமை!


Rope Life Hacks


யானைக் கட்டி போர்


நீ எந்த பள்ளிக்கூட மாணவன் ?


50 Feet Distance with Charging...


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...