|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 October, 2012

பார்த்ததில் பிடித்தது...


நீரின்றி அமையாது உலகு...


நீரின்றி அமையாது உலகு...என்று வள்ளுவர் பெருந்தகை சொல்லிய காலத்தில் இருந்து நீரின் மீது கவனமாக இருந்த தமிழ் சமூகம், இதுவரை தப்பிப்பிழைத்து வந்தது.,ஆனால் இனி அது நடக்காது போலிருக்கிறது.குடிப்பதற்கும்,விவசாயத்திற்கும் கொஞ்சம் தண்ணீர் திறந்துவிடுங்கள் என்று அண்டை மாநிலத்தை கேட்டால், இப்போதெல்லாம் சண்டைக்குதான் வருகிறார்கள்.நாமும் நமது நீர் நிலைகளை பிளாட் போட்டு விற்றுவிட்டோம்,மரங்களையெல்லாம் வெட்டி இயற்கையை பாழ்படுத்திவிட்டோம்,ஆற்றில் சாயக்கழிவுதான் ஒடுகிறது மொத்தத்தில் நமது கண்களையே நாமே எவ்வளவு முடியுமோ அவ்வளவு குத்திக்கொண்டுவிட்டோம்.இப்போது தண்ணீர் இல்லை என்று ஒலமிடுகிறோம்,ஒரு செடியைக்கூட நட நேரமில்லாமல் சும்மா ஒலமிட்டு என்ன செய்வது.வெறுத்துப் போன தண்ணீராபிமானி தனது செலவில் போஸ்டர் அடித்து கண்ணீர் சிந்தியுள்ளார். வழக்கம் போல சிரித்துவிட்டு போனாலும் சரி, இல்லை கொஞ்சமாவது சிந்தித்து செயல்பட்டாலும் சரி.

கடைசியாக பூனைக்கு மணிகட்டிய தேவராஜன்!


திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் தேவராஜன் என்பவர்.தனது வழக்கு மனுவில், "கொளத்தூரில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் ‘மன்மத அம்பு' படம் பார்க்க சென்று இருந்தேன். அங்கு முதல் வகுப்பு டிக்கெட் கட்டணம் 85 ரூபாய் என அரசு நிர்ணயித்துள்ளது. ஆனால் என்னிடம் 150 ரூபாய் டிக்கெட் கட்டணமாக வசூலித்தனர். என்னை ஏமாற்றி கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளனர்.இதுதொடர்பாக கொளத்தூர் போலீசில் புகார் செய்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. சென்னையில் உள்ள முக்கியமான 10 சினிமா தியேட்டர்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த தியேட்டர்களில் சட்டவிரோதமாக கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பதன் மூலம் ஒரு நாளைக்கு 5 காட்சிகள் மூலம் ரூ.34 லட்சத்து 75 ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. மேலும், சென்னையில் உள்ள முக்கியமான 17 தியேட்டர்களில் 4 காட்சிகளுக்கு பதிலாக தினசரி 5 காட்சிகள் ஒளிபரப்பபடுகிறது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு இந்த தியேட்டர்கள் சட்ட விரோதமாக ரூ.1 கோடியே 20 லட்சத்து 65 ஆயிரம் வரை வசூலிக்கின்றன.
இந்த 17 தியேட்டர்களில் மட்டுமே என்னால் ஆதாரங்கள் சேகரிக்க முடிந்தது. சென்னையில் இதுபோல் 120-க்கும் மேற்பட்ட சினிமா தியேட்டர்கள் உள்ளன. இதனை கணக்கிட்டால் அரசு நிர்ணயித்த டிக்கெட்டைவிட கூடுதல் கட்டணமாக பொதுமக்களிடம் இருந்து ரூ.100 கோடி வரை வசூலிக்கப்படுகிறது.இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதம் போலீஸ் கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் புகார் செய்தேன். நடவடிக்கை இல்லை. எனவே எனது புகார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோர்ட்டு உத்தரவிடவேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆறுமுகசாமி இதுகுறித்து ஒரு வாரத்தில் பதில் அளிக்கும்படி சென்னை போலீஸ் கமிஷனருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...