|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

29 April, 2013

மூக்கை குடைந்து நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்போம்!

 
நோய் எதிர்ப்புச் சக்தி நமது மூக்கில் உள்ள கழிவில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா உங்களால்... ஆம் என நிரூபித்திருக்கிறார் சாஸ்க் விஞ்ஞானி. துணை பேராசிரியராக சாஸ்கட்ச்வன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஸ்காட் நேப்பர் சொல்கிறார், நாம் கெட்டபழக்கம் என ஒதுக்கும் பல விஷயங்களில் நன்மை தருபவனவும் உள்ளன. மூக்கை விரல் விட்டு குடைவதும் அவற்றில் ஒன்று என்கிறார். மேலும் இப்பழக்கம் இயற்கையாகவே மனிதர்களுக்கு உருவாகக்கூடிய ஒரு குணம் என்றும், நோயெதிர்ப்புச் சக்தி ஊக்கி என்றும் கூறுகிறார்.மூக்கை குடைவதோடு, அதனை சாப்பிடுவதும் உடலுக்கு ரொம்பவே நல்லதாம்.மூக்கில் ஒளுகும் சளி அல்லது சளி போன்ற திரவத்தில் நுரையீரலைக் காக்கும் காரணிகள் காணப்படுகின்றனவாம். அதனை உட்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பாற்றல் வலுப்பெறுகிறதாம். 
 
இயற்கையான நோய்த்தடுப்பு மருந்தாக மூக்கில் உருவாகும் கழிவுகள் செயல்படுகின்றனவாம். எனவே, அவற்றை சாப்பிடுதல் மிகவும் நல்லது என ஸ்காட் நிரூபித்துள்ளாராம்.மூக்கை துடைத்த கர்ச்சீப் அல்லது டிஸ்யூவைக் கொண்டு உடலின் பாகங்களைத் தேய்க்கும் போது அல்லது துடைக்கும் போது கூட உடலில் நல்ல ஆண்டிபாடிஸ் பெருகச் செய்கிற ஆற்றல் அவற்றிற்கு உண்டாம்.ஸ்காட்டின் ஆராய்ச்சிகள் தற்போது ஆரம்ப நிலையிலேயே உள்ளனவாம். விரைவில் விரிவான ஆராய்ச்சி முடிவை வெளியிடுவாராம்.தற்போது மனிதர்களின் மூக்கில் இருந்து எந்த வகையான மூக்குக் கழிவுகள் மனிதனுக்கு உண்பதன் மூலம் வேறு வகையான நோய்களைத் தோற்றுவிக்கின்றன என்பது குறித்த ஆய்வில் இருக்கிறாராம் ஸ்காட்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...