|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 April, 2013

காமராஜர் ஒரு சகாப்தம்!

தஞ்சை மருத்துவகல்லூரி உருவான கதை!
 ஒரு நாள் காமராஜரைச் சந்திக்க வந்த செல்வந்தர் ஒருவர், கோவையில் மருத்துவக் கல்லூரி ஒன்று அமைக்க ரூ.20 லட்சம் தருவதாக கூறினார். அந்த திட்டத்திற்க்கு 1 கோடி செலவாகும் என்றும், மீதி 80 லட்சத்தை அரசு முதலீடு செய்ய வேண்டும் என்றும் அந்தச் செல்வந்தர் கேட்டுக்கொண்டார். அந்த மருத்துவக்க் கல்லூரி, தனியார் நிர்வாகத்தில் இருகுமென்றும் கூறினார். இதற்குச் சம்பந்தப்பட்ட சுகாதரத்துறை அமைச்சரின் ஆதரவும் ஆமோதிப்பும் இருத்தது.


சிறிது காலத்திற்க்குப் பிறகு, இத்திட்டம் சம்பந்தமான கோப்பு அனுமத்க்காகக் காமராஜரின் பார்வைக்கு வந்தது. சம்பந்தபட்ட அமைச்சரைக் காமராஜர் அழைத்து, "80 லட்சம் ரூபாயை ஒரு தனியாரிடம் கொடுத்து மருத்துவக் கல்லூரி தொடங்குவதைவிட, இன்னும் 20 லட்சத்தைப் போட்டு அரசாங்கமே மருத்துவக் கல்லூரியை தொடங்களாமே? தனியாரை மருத்துவக் கல்லூரி தொடங்க அனுமதித்தால், அவர்கள் அதைத் தொழிலாக்கிவிடுவார்கள். லாபம் சம்பாதிப்பதுதான் அவர்கள் நோக்கமாக இருக்கும். சேவை மனப்பான்மை இருக்காது" என்றார். சம்பந்தப்பட்ட அமைச்சர் பதில் ஏதும் சொல்ல முடியாமல் திக்கு முக்காடிப் போனார்.

கோவையில் தனியார் மருத்துவக் கல்லூரியைத் தொடங்க அனுமதி மறுத்த காமராஜ், தஞ்சாவூர் போர்டு, ரயில்வே செஸ் வரியாக வசூலித்த தொகையில் ரூ 1.30 கோடி இருப்பதை கேள்விப்பட்டு, அதை மருத்துவக் கல்லூரி தொடங்க செலவழிப்பதற்கு அனுமதி அளித்தார். மேற்கொண்டு பணம் தேவைப்பட்டாலும் அரசு கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் கூறினார். இவ்வாறு தஞ்சையில் 1 கோடிக்குமேல் செலவு செய்து அரசு மருத்துவக் கல்லூரி அமைந்திட ஆதரவும், ஊக்கமும் அளித்தார். இன்று தஞ்சையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மருத்துவக்கல்லூரி, காமராஜரின் முயற்சியினால் உருவானது என்கிற உண்மை பலருக்குத் தெரியாமல் போனதில் வியப்பில்லை."

 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...