|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 March, 2013

பாம்பை தேடி பயணம்!



மேகமலையில், உலகிலேயே இல்லாத அபூர்வ இனத்தைச் சேர்ந்த பாம்பு இனங்களை தேடி, பத்து பேர் கொண்ட நிபுணர் குழு வருகிறது.மேற்கு தொடர்ச்சி மலையில், அதிக வளங்களை கொண்ட வனப்பகுதியாக, தேனி மாவட்டம், மேகமலை உள்ளது. ஒரு லட்சம் ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பில் வனங்கள் உள்ளன. இங்கு யானை, புலி உட்பட பல்வேறு வகை பறவைகள், அபூர்வ வகை பாம்புகள் உட்பட, உலகின் மற்ற வனங்களில் இல்லாத அபூர்வ விலங்கினங்கள், உயிரினங்கள் வாழ்கின்றன. வன உயிரின ஆர்வலர்கள் அவ்வப்போது, இந்த வனங்களில் ஆய்வு நடத்துகின்றனர். தற்போது, பாம்புகளை பற்றி ஆய்வு நடத்த, கர்நாடகாவை சேர்ந்த பாம்பு நிபுணர் சைதன்யா தலைமையில், 10 பேர் குழுவினர் மேகமலைக்கு வருகின்றனர். இவர்கள் வருகையின் முக்கிய நோக்கம், உலகில் வேறு எங்கும் இல்லாத அபூர்வ இனத்தை சேர்ந்த ""ஹட்டன் பிட் வைப்பர்'' என்ற பாம்பு இனத்தை தேடி வருகின்றனர். இந்த பாம்பை 100 ஆண்டுகளுக்கு முன், ஹட்டன் என்ற ஆங்கிலேய வன ஆர்வலர் மேகமலையில் பார்த்துள்ளார். 

அப்போது இந்த வகை பாம்புகளை பிடித்து லண்டன் மியூசியத்திலும், மும்பையில் உள்ள மியூசியத்திலும் வைத்துள்ளனர். இன்னும், இந்த பாம்பின் உடற்கூறுகளை இங்கு பாதுகாத்து வருகின்றனர். அதன் பிறகு, யாருமே இந்த பாம்புகளை பார்க்கவில்லை. இந்த வகை பாம்பு இனமே அழிந்து விட்டதாக, வனத்துறை கருதுகிறது. ஆனால், பாம்பு நிபுணர் சைதன்யா தலைமையிலான குழுவினர், இன்னும் இந்த இனம் மேகமலையில் வாழ்வதாக, உறுதியாக நம்புகின்றனர். எனவே தான், இந்த இனத்தை ஒரு மாதத்திற்கு மேல் வனத்திற்குள் தங்கி,தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.ஹட்டன் பிட் வைப்பர்'' பாம்புகளை மேகமலையில் கண்டறிந்தால் அது உலக சாதனையாகவே கருதப்படும். அழிந்து விட்ட பாம்பு இனங்களின் பட்டியலில் உள்ள இந்த ரகம் இன்னும் வனத்தில் வாழ்கிறது, என்ற நம்பிக்கையில் நாங்கள் தேடுகிறோம். இந்த வனத்தை தவிர, உலகின் வேறு எங்கும் இவ்வகை பாம்பு இனங்கள் இல்லை, என்பதே உண்மை. இந்த பாம்புகளை தேடும் பணியில் ஈடுபடும் போது, மேலும் பல அபூர்வ வன உயிரினங்கள் பற்றிய சுவாராஸ்யமான தகவல்களும் வெளிவரும் என நம்புகிறோம்,  

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...