|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 March, 2011

மீண்டும் ஒரு சொதப்பல்-268 ர ன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்தியா

அபாரமாக ரன் குவித்திருக்க வேண்டிய ஒரு போட்டியை இந்தியா மீ்ண்டும் சொதப்பலாக ஆடி குறைந்த ரன்களுக்குச் சுருண்டு போனது.
Yuvaraj Singh
சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் இன்று இந்தியாவும், மேற்கு இந்தியத் தீவுகளும் மோதின. டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது.இன்றைய போட்டியில் இந்தியத் தரப்பில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. வீரேந்திர ஷேவாக் நீக்கப்பட்டு அவருக்குப் பதில் சுரேஷ் ரெய்னா சேர்க்கப்பட்டார். அதேபோல முனாப் படேல் நீக்கப்பட்டு அஸ்வின் சேர்க்கப்பட்டார்.

இந்தியாவுக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தனது 100வது சதத்தை இன்று சச்சின் எடுப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கொண்டிருந்த நிலையில், அவர் 2 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து கம்பீரும் சொற்ப ரன்களில் வெளியேறினார். குறுகிய நேரத்திற்குள் 2 விக்கெட்களை இழந்ததால் இந்தியா தடுமாற்றமடைந்தது.

இருப்பினும் விராத் கோலியும், யுவராஜ் சிங்கும் இணைந்து விக்கெட் வீழ்ச்சியைத் தடுத்து நிறுத்தி ரன் குவிக்க முற்பட்டனர். விராத் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இருப்பினும் யுவராஜ் சிங் உறுதியாக நின்று அடித்து ஆடினார். சிறப்பாக ஆடிய யுவராஜ் சிங் சதம் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.

இது யுவராஜ் சிங்குக்கு 14வது ஒரு நாள் சதமாகும். அதேசமயம், உலகக் கோப்பைப் போட்டிகளில் இது முதல் சதமாகும். 112 பந்துகளில் 100 ரன்களை எட்டினார் யுவராஜ்.

சிறப்பாக ஆடிய யுவராஜ் சிங் ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அவருக்குப் பின்னால் யாருமே நின்று ஆட முயற்சிக்கவில்லை. மாறாக டீயைக் குடித்து விட்டு பாதியில் வைத்து விட்டு வந்ததைப் போல அவசரம் அவசரமாக ஆடி பெவிலியனுக்குத் திரும்பவே எத்தனித்தது போல தெரிந்தது.

கேப்டன் டோணி 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். பிரமாதமாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா 4 ரன்களே போதும் என்பது போல மோசமான முறையில் அவுட்டாகி வெளியேறினார்.

யூசுப் பதான் வழக்கம் போல இந்தப் போட்டியிலும் ஆடவில்லை. 11 ரன்களை எடுத்து விட்டுக் கிளம்பினார். பின்னர் வந்தவர்களில், அஸ்வின் மட்டுமே சற்று அடித்து ஆட எத்தனித்தார். அவர் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஜாகிர் கான் 5, ஹர்பஜன் சிங் 3 என ஓடி விட்டனர்.

பேட்டிங் பவர் பிளேயை மீண்டும் ஒரு முறை சரியாகப் பயன்படுத்தத் தவறி குறைந்த ரன்களை எடுத்து விக்கெட்களை இழந்து ரசிகர்களை பெரும் எரிச்சலுக்குள்ளாக்கியுள்ளது இந்தியா.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...