|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 March, 2013

வாயிலிருந்து நோய்த் தொற்று!

 
பிறந்த குழந்தைக்கு வாயுடன் வாய் வைத்தும், முகத்திலும் முத்தமிட்டதால், அக்குழந்தைக்கு நோய்த் தொற்று ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்து போனது. இதனால் அக்குழந்தையின் பெற்றோர் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். அக்குழந்தையின் பெயர் பேபி கெய்டன் மெக்கார்மிக். இக்குழந்தை 2 மாதங்களுக்கு முன்புதான் பிறந்தது. ஆனால் குழந்தையைக் கொஞ்சும் ஆர்வத்தில் அதன் வாயில் முத்தமிட்டுள்ளார் தந்தை கார்ல் மெக்கார்மிக். ஆனால் கார்லின் வாயிலிருந்து நோய்த் தொற்று குழந்தைக்குப் பரவி குழந்தையின் உயிரையே பறித்து விட்டது. இதனால் கார்லும், அவரது மனைவி மேரி கிளேரும் கடும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். உயிரிழந்த குழந்தை குறைப் பிரசவத்தில் பிறந்ததாகும். எனவே குழந்தைக்கு மூச்சு விடுவது உள்ளிட்ட பல்வேறு சிரமங்கள் ஏற்கனவே இருந்து வந்தன. இந்த நிலையில்தான் தந்தை முத்தம் கொடுக்கப் போக குழந்தை இறந்து விட்டது. கார் மெக்கார்மிக்கிடமிருந்து பரவிய ஹெர்பஸ் சிம்ப்ளக்ஸ் என்ற வைரஸ்தான் இந்த மரணத்திற்கு காரணம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர். இந்த வைரஸானது அனைவரிடமும் இருக்குமாம். நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது முத்தம் உள்ளிட்டவை மூலம் இது பரவி விடுமாம். கடும் காய்ச்சலை ஏற்படுத்தும் இந்த வைரஸ்தான், குழந்தையின் உயிர் பறிபோக காரணமாக அமைந்து விட்டது. தனது குழந்தையின் மரணத்திற்குத் தானே காரணமாகி விட்டதை நினைத்து வருத்தத்திலும், வேதனையிலும் உள்ளாராம் கார்ல்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...