|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 November, 2011

இந்தியா,"சூப்பர் பவர்' நாடு இல்லை; "சூப்பர் புவர்' நாடு சசி தரூர்!


இருபத்தோராம் நூற்றாண்டில் வல்லரசாக வேண்டும் என்ற நோக்கம் இருந்தாலும், வல்லரசில்லாத நிலையில் தான் சென்று கொண்டிருக்கிறோம். வல்லரசு என்றால் அரசியல், பொருளாதாரம், ராணுவத்தில் மேன்மை பெற்றிருக்க வேண்டும். இந்த தகுதியை அமெரிக்கா பெற்றுள்ளது. அமெரிக்காவால் கிழக்காசியா மட்டுமல்லாது, உலகில் எந்த இடத்திலும் நின்று போரிடும் வல்லமை உள்ளது. இந்த நிலையை சீனாவோ, இந்தியாவோ நினைத்துக் கூட பார்க்க முடியாது.

இந்தியாவில் இன்னும் பலர், மூன்று வேளை சோற்றுக்கே கஷ்டப்படுகின்றனர். ஒதுங்க இடம் கூட இல்லாமல், திறந்த வெளியில் பலர் படுத்துறங்கும் நிலை உள்ளது. பெற்றோர்கள் பலர், தங்கள் குழந்தைகளுக்கு உரிய கல்வி அளிக்க முடியாத நிலையில் உள்ளனர். இந்த அடிப்படை தேவைகளையெல்லாம் பூர்த்தி செய்யாததால், நாம் வல்லரசு உரிமையைக் கொண்டாட முடியாது. இந்த விஷயத்தில் இந்தியா,"சூப்பர் பவர்' நாடு இல்லை; "சூப்பர் புவர்' நாடு தான். இந்தியாவை, சீனாவுடன் ஒப்பிட முடியாது. ஏனென்றால், சீனாவால் செய்ய முடிந்ததை, இந்தியாவால் செய்ய முடியாது. சீனா பொருளாதாரத்திலும், வளர்ச்சியிலும் இந்தியாவை மிஞ்சி நிற்கிறது. கலாசாரத்தை போற்றுவதில் வேண்டுமானால், இருநாடுகளுக்கும் ஒற்றுமை இருக்கலாம். மற்றபடி, இரு நாடுகளுக்கிடையே நிறைய முரண்பாடுகள் உள்ளன.இவ்வாறு சசி தரூர் கூறினார். விமானத்தில், "எகானமி' வகுப்பில் பயணிப்பது, மாட்டுக் கொட்டகையில் இருப்பது போன்றது எனக் கூறி, சர்ச்சைக்கு ஆளானவர் சசி தரூர். பின், ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி தொடர்பான சர்ச்சையில் சிக்கி, மத்திய அமைச்சர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...