ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டிற்கு எதிராக கையேழுத்து சேகரிக்கும்
வேலைத்திட்டம் ஒன்றை வடக்கு கிழக்கில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள்
மன்றத்தினர் இன்று முதல் ஆரம்பித்துள்ளனர். மக்கள் ஆவணம் என்ற பெயரில் தாய்
நாட்டிற்கு எதிராக வெளிநாட்டு சக்திகளை தோற்கடிப்போம் என்ற தொனிப்பொருளில்
இக்கையெழுத்து சேகரிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு மன்னார் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளில் முஸ்லீம்
பிரதேச இளைஞர்கள் ஆதரவளித்துள்ள போதிலும் தமிழ் பிரதேசங்களில் உள்ள
இளைஞர்கள் இதற்கு கையொப்பம் இட மறுத்துள்ளனர். மட்டக்களப்பில் நடந்த ஆரம்ப வைபவத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு
மாகாண பணிப்பாளர் தவராசா கலந்து கொண்ட போதிலும் தமிழ் இளைஞர்கள்
இத்திட்டத்திற்கு ஆதரவளிக்க மறுத்துள்ளனர்.


No comments:
Post a Comment