|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

03 May, 2012

ஒழுக்கம் என்பது தேடவேண்டி வருமோ!

கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 1 1/2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனலட்சுமி திடீரென குழந்தையுடன் மாயமானார். பல்வேறு இடங்களில் தேடியும் மனைவியைகண்டுபிடிக்க முடியாததால் கார்த்திக் கொருக்குப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.இன்ஸ்பெக்டர் சம்பத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தனலட்சுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த மதன் என்ற வாலிபருடன் பழக்கம் இருந்தது தெரிய வந்தது. 2 பேரும் வீட்டை விட்டு ஓடி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரணை நடத்தப்பட்டது.  
 
அப்போது தனலட்சுமியும், மதனும் திருவள்ளூரில் தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார் 2 பேரையும் மீட்டு கொருக்குப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.தனலட்சுமியிடம் பெண் போலீசார் விசாரணை நடத்தினர். கணவருடன் செல்லுமாறு கேட்டுக்கொண்டனர். ஆனால் அவர் இதற்கு மறுப்பு தெரிவித்தார். எனது கணவருடன் செல்வதற்கு நான் விரும்பவில்லை என்று உறுதியாக கூறி விட்டார்.இதையடுத்து தனலட்சுமியை மயிலாப்பூரில் உள்ள காப்பகத்துக்கு கைக்குழந்தையுடன் அனுப்பி வைக்கப்பட்டார். காதலன் மதன் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...