|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 January, 2012

தொழில் ரீதியாகவே எங்கள் தொடர்புநடிகர் தனுஷுடன் இணைத்து செய்தி வெளியிட்டதற்காக குமுதம் வார இதழுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார் நடிகை ஸ்ருதி. ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் 3 என்ற படத்தில் நாயகியாக நடிக்கிறார் ஸ்ருதி. இதில் ஐஸ்வர்யாவின் கணவர் தனுஷ் நாயகனாக நடிக்கிறார். படத்தில் நடிக்கும்போது தனுஷுக்கும் ஸ்ருதிக்கும் காதல் அரும்பியதாகவும், இருவரும் ஜோடியாக சுற்றுவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆங்கிலப் பத்திரிகைகளிலும் இந்த செய்தி வெளியானது.ஆரம்பத்தில் அமைதி காத்த தனுஷ் மற்றும் ஸ்ருதி தரப்பு, விவகாரம் ஓயாமல் தொடர்ந்ததால், இப்போது மறுப்பு தெரிவித்து வருகிறது.இந்த செய்திகளை முதலில் ஐஸ்வர்யா மறுத்திருந்தார். இப்போது ஸ்ருதி ஹாஸனும் மறுத்துள்ளார். அத்துடன் செய்தியை வெளியிட்டதற்காக குமுதம் பத்திரிகைக்கு அவர் வக்கீல் நோட்டீசும் அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், "என்னையும் தனுசையும் இணைத்து வெளியான கட்டுரை முற்றிலும் கற்பனையானது. ஆதாரம் இல்லாதது. இதற்காக குமுதத்துக்கு நான் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளேன். பதில் அளிக்காவிட்டால் அடுத்த கட்டமாக சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். குறிப்பிட்ட ஆங்கில நாளிதழுக்கும் நோட்டீஸ் அனுப்பவிருக்கிறேன்.சக நடிகர் என்ற முறையில் தனுஷ் படப்பிடிப்பில் தொழில் ரீதியாக எனக்கு உதவிகள் செய்தார். தொழில் ரீதியாகவே எங்கள் தொடர்புகள் இருந்தது. இதை வைத்து தவறான வதந்திகளை பரப்புவது வருத்தம் அளிக்கிறது.தனுஷ் மனைவி ஐஸ்வர்யா வும் நானும் நண்பர்களாக இருக்கிறோம். இந்த வதந்தி எங்கள் நட்பை பாதிக்காது," என்றார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...