|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 November, 2011

படைப்பாளியாகவே உருவாக விரும்புகிறேன் கீர்த்தனா!

மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் பார்த்திபனின் மகள் கீர்த்தனா என்ற செய்தி, கோலிவுட் முழுவதும் பரவி வருகிறது. இதுகுறித்து கீர்த்தனா கூறியுள்ளதாவது, இயக்குநர் மணிரத்னம், இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக என்னை நடிக்கச் சொல்லி கேட்டது உண்மைதான். ஆனால் எனக்குத் தான் நடிப்பதில் துளியும் விருப்பம் இல்லை. என் தந்தையைப் போல ஒரு படைப்பாளியாகவே உருவாக விரும்புகிறேன்.  என் தந்தை கூட என்னிடம், நடிப்பு, அழகு இல்லாதவர்கள் கூட நடிக்கத் துடிக்கும்போது, நீ ஏன் வந்த வாய்ப்பை மறுக்கிறாய் என்றார். நடிப்பு என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு குறுகிய வட்டம் தான். குறிப்பிட்ட காலம் வரை மட்டுமே கதாநாயகியாய் நடிக்க முடியும். ஆனால், எந்த வயதிலுமி ஒரு படைப்பாளியால் நல்ல படைப்பை கொடுக்க முடியும் என்பதால் மணிரத்னத்திடம் உதவி இயக்குநராக பணிபுரியும் வாய்ப்பு கேட்டேன். உடனே வாய்ப்பு கொடுத்திருக்கிறார். தற்போது அவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறேன். இந்த வாய்ப்பை நல்ல படியாகவே பயன்படுத்திக்கொள்வதே இப்போது என் ஆசை என்கிறார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...