|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

15 November, 2011

இணையத்தளங்கள் பதிவு குறித்து பேச்சு நடத்த இலங்கை அரசு அழைப்பு!

வெளிநாட்டில் இயங்கி வரும் இணையத்தளங்கள், பேஸ்புக் பக்கங்கள், வலைப்பூக்கள் உள்ளிட்ட அனைத்து செய்தி சார் இணைய ஊடகங்களையும் பதிவுக்கு உட்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அரசு அழைப்பு விடுத்துள்ளது. இலங்கையர்கள் மற்றும் இலங்கை தொடர்பாக உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் செய்திகளை பிரசுரம் செய்யும் இணையத் தளங்களை பதிவு செய்வதற்கு ஊடக அமைச்சகம் தீர்மானித்துள்ளது. ஊடக அமைச்சகத்தின் இந்தக் கோரிக்கையில் பல்வேறு குழப்ப நிலைமைகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கை சார்பாக வெளிநாடுகளில் இயங்கி வரும் இணையத்தளங்களை எவ்வாறு வகையீடு செய்வது அவற்றை எவ்வாறு பதிவு செய்வது என்பது தொடர்பாக தெளிவாக்கப்படவில்லை. தொழில்நுட்ப ரீதியாகவும் பல்வேறு குழப்ப நிலைமைகள் காணப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இணையத்தளங்களை பதிவு செய்ய வேண்டியது இன்னமும் சட்டமாக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தளங்களை பதிவு செய்வது குறித்து, முதல் கட்டமாக அரசாங்கம் வெறுமனே ஓர் கோரிக்கையை மாத்திரம் முன்வைத்துள்ளது. எதிர்காலத்தில் இந்தக் கோரிக்கை நிபந்தனைகளுடன் கூடிய சட்டமாக அமுல்படுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...