|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 January, 2012

பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள்...


2012ம் ஆண்டிற்காக பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் பத்ம விபூஷன் விருது பெற 5 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் இருந்து ஏழு பேரும் பத்ம பூஷன், பத்மஸ்ரீ விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டிற்கான பத்ம விருதுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் கலை ஓவியத்துறையில் சிறந்த பணி ஆற்றியதற்காக மேற்கு வங்கத்தைச் சேர்ந்த கே.ஜி. சுப்ரமணியன், கோவாவைச் சேர்ந்த கார்டூனிஸ்ட் மறைந்த மரியோ டி மிராண்டா, அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த வாய்ப்பாட்டு கலைஞர் மறைந்த பூபேன் ஹசாரிகா, மகாராஷ்டிராவைச் சேர்ந்த எலும்பு சிகிச்சை நிபுணர் காந்திலால் ஹஸ்திமால் சன்செட்டி, டெல்லியைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.வி.ராஜேஸ்வர் ஆகிய ஐவருக்கு பத்மவிபூசன் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

பத்ம விருதுகள் பெறும் தமிழர்கள்:

மேலும் தமிழகத்தைச் சேர்ந்த 7 பேரும் பத்ம பூஷண், பத்மஸ்ரீ விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பத்ம பூஷண் பெறும் தமிழர்கள்: எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன்- வயலின் கலைஞர்

டாக்டர் திருப்பூணித்துரா விஸ்வநாதன் கோபாலகிருஷ்ணன் - வாய்ப்பாட்டுக் கலைஞர்

சுப்பையா முருகப்ப வெள்ளையன் - வணிகம் மற்றும் தொழில்துறை

பத்மஸ்ரீ விருது பெறும் பெறும் தமிழர்கள்:

நடேசன் முத்துசாமி கலை-நாடகம்

டாக்டர் பி.கே.கோபால்- சமூகப் பணி

சர்க்கரை நோய் நிபுணர் டாக்டர் விஸ்வநாதன் மோகன்- மருத்துவம்

டாக்டர் வல்லார்புரம் சென்னிமலை நடராஜன்-முதியோர் நல மருத்துவம்

இவர்களுக்கு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெறும் விழாவில் விருதுகளை குடியரசுத்தலைவர் வழங்குவார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...