|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

08 April, 2011

லோக்பால் கமிசனின் முக்கியமான பத்து அம்சங்கள் !


ஜன லோக்பால் என்பது எந்த ஒரு அரசியல் தலையீடுமின்றி தனித்து இயங்கும் ஒரு கமிசன். ஊழல் , லஞ்சம் போன்ற வேலைகளில் ஈடுபடும் நபர் யாராக இருந்தாலும் ( உச்ச நீதிமன்ற நீதிபதி , இந்திய பிரதமர், முதலமைச்சர் என யாரும் விதி விளக்கு அல்ல) வெறும் ஒரு ஆண்டில் விசாரணையை முடித்து , அடுத்த ஆண்டில் சிறையில் அடைப்பதே இவர்களின் பணியாகும் .
இப்போது தெரிகிறதா ஏன் காங்கிரஸ் அரசு இதனை ஆதரிக்கவில்லை என்று . இனி மேற்சொல்லிய பத்து அம்சங்களையும் பார்ப்போமா?

1 ) மத்தியில் லோக்பால் என்ற அமைப்பும் , ஒவ்வொரு மாநிலங்களில் லோகயுக்ட எனும் அமைப்பும் அமைக்கப்படும் (இவை இரண்டின் பணியும் ஒன்றே )

2 ) தேர்தல் கமிசன் , உச்ச நீதிமன்றம் போன்று இதுவும் யாருடைய தலையீடும் இன்றி இயங்கும் அமைப்பாகும். எந்த அமைச்சரோ அல்லது அரசு நிறுவனங்களோ இதனை கட்டுபடுத்த முடியாது.

3 ) யார் மீது ஊழல் குற்றச்சாட்டு வந்தாலும் ஒரு வருடத்தில் அதனை விசாரித்து , இரண்டு வருடங்களுக்குள் அவர்கள் சிறையில் அடைக்கபடுவார்கள் (இதன் தீர்ப்பில் எவரும் தலையிட முடியாது )

4 ) ஊழலால் நாட்டுக்கு ஏற்பட்ட இழப்பு , குற்றம் நிருபிக்கப்பட்ட உடன் இழப்பீடு செய்யப்படவேண்டும்.

5 ) சாதாரண குடிமகனுக்கு அரசு அலுவலகங்களிலோ அல்லது அரசு தலையீடு உள்ள நிறுவனங்களிலோ ஏதேனும் சேவை பெறும்போது காலதாமதம் ஆனால் அதற்கு பொறுப்பான அலுவலர் மீது அபராதம் விதிக்கப்பட்டு அந்த தொகை பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடாக அளிக்கப்படும்.

6 ) ஒவ்வொரு குடிமகனும் தனக்கு தேர்தல் அடையாள அட்டை, ரேசன் அட்டை,

7 ) அரசு ஊழல் பேர்வழிகளை லோக்பால் கமிசனில் தலைவர்களாக பதவி கொடுத்தால் ? இந்த கேள்விக்கே இடமில்லை , ஏனெனில் இதன் ஊழியர்களும் தலைவர்களும் நீதிபதிகளாலும் மக்களின் நம்பிக்கை பொருந்திய பிரதிநிதிகளாலும் தேர்ந்தேடுக்கபடுவர். எந்த ஒரு அரசியல்வாதியும் இதில் தலையிட முடியாது.

8 ) லோக்பால் ஊழியரே ஊழலில் ஈடுபட்டால் ? இது நடக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் இந்த கமிசனின் அனைத்து செயல்பாடுகளும் நன்றாக ஒவ்வொரு ஊழியர் மட்டுமல்லாமல் மக்களாலும் கண்காணிக்கப்படும். ஏதேனும் புகார் என்றால் அந்த ஊழியர் மீது விசாரணை நடத்தப்பட்டு இரு மாதங்களில்
தண்டிக்கப்படுவார்.

9 ) தற்போது இருக்கும் அனைத்து ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு துறை (சிபிஐ, vigilence ) லோக்பால் கமிசனுடன் இணைக்கப்பட்டு முழு சுதந்திரம் அளிக்கப்படும்.

10 ) புகார் அளிப்பவரின் பாதுகாப்பை உறுதி செய்வது லோக்பலின் பொறுப்பாகும்.சும்மா அதிருதுல்ல .. இப்போ தெரியுதா ஏன் அரசியல் கட்சிகள் இதை எதிர்குதுன்னு…. மிகமோசமாக போடப்பட்ட சாலைகள் போன்ற சேவைகளை பெறும்போது தாமதம் அடைந்தாலோ அல்லது ஊழல் நடந்தாலோ லோக்பல்க்கு ஒரு மனு கொடுத்தால் ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும். காரணமான அலுவலர் வெகு விரைவில் சிறையில் அடைக்க படுவார் (அதிகபட்சம் 2 ஆண்டுக்குள் தண்டிக்கப்படுவார்).


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...