|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

16 May, 2012

ஐசில் ஆஃப் மேன் தீவுக்கு போன யூனிடெக் நிறுவனத்தின் ரூ. 250 கோடி?


2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் யூனிநார் செல்போன் சேவையை வழங்கும் நார்வே நாட்டின் யூனிடெக் நிறுவனம் ஐசில் ஆஃப் மேன் நாட்டில் ரூ. 250 கோடியை (51 மில்லியன் டாலர்) முதலீடு செய்தது குறித்து சிபிஐ தீவிர விசாரணை நடத்தி வருகிறது.இந்த பணப் பரிமாற்றத்துக்கும் முன்னாள் மத்தியத் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கும் தொடர்புள்ளதா என்ற விசாரணை நடந்து வருகிறது.ஏற்கனவே கலைஞர் தொலைக்காட்சிக்கு ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உசேன் பல்வா ரூ. 200 கோடியை வழங்கிய விவகாரத்தில் ராசா, திமுக எம்பி கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் சரத் குமார் ஆகியோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

அதே போல மொரீசியசில் உள்ள டெல்பி நிறுவனத்துக்கு ரிலையன்ஸ் டெலிகாம் நிறுவனம் தனது கோடிக்கணக்கான மதிப்புள்ள பங்குகளை வழங்கியது குறித்தும் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இந்த டெல்பி நிறுவனத்துக்கும் ராசாவுக்கும் உள்ள தொடர்பு குறித்த விசாரணை நடந்து வருகிறது.இந் நிலையில், யூனிடெக் நிறுவனம் ஐசில் ஆஃப் மேன் தீவுகளில் யூனிடெக் ஓவர்சீஸ் லிமிட்டெட் என்ற துணை நிறுவனம் மூலமாக 'one yield enhancement certificate' என்ற வகையிலான பங்கு பத்திரத்தில் ரூ. 250 கோடி முதலீட்டைச் செய்துள்ளது.கடந்த 2007ம் ஆண்டு டிசம்பரில் யூனிடெக் நிறுவனத்துக்கு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முதலீடுகள் மொரீசியஸ் நாட்டைச் சேர்ந்த சில நிறுவனங்கள் மூலமாக செய்யப்பட்டுள்ளது.ஆனால், 2009ம் ஆண்டு ஜனவரி மாதம் யூனிடெக் நிறுவனம் இந்த முதலீட்டை நஷ்டமாகக் காட்டி கணக்கை முடித்துவிட்டது.

இது 2ஜி லைசென்ஸ் கிடைத்ததற்கு பிரதிபலனாக யாருக்கோ தரப்பட்ட பணமாக இருக்கலாம் என்று சிபிஐ கருதுகிறது. இது குறித்து விசாரணை நடத்தவும் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துவிட்டது. இந்த பணப் பரிவர்த்தனை குறித்து விவரம் கேட்டுஸ விரைவில் அந்த நாட்டுக்கு நீதிமன்றம் மூலமாக கடிதம் அனுப்பவும் சிபிஐ திட்டமிட்டுள்ளது.அதே போல இந்த விவகாரம் குறித்து அமலாக்கப் பிரிவும் விசாரணை நடத்தி வருகிறது.Mann என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஐசில் ஆஃப் மேன் தீவு, இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் இடையே ஐரிஷ் கடலில் உள்ளது. இது ஒரு சுதந்திரமான தீவு என்றாலும், இதன் வெளிவிவகார விஷயங்கள் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...