|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 October, 2011

6 மாநகராட்சிகளில் பெண் மேயர்கள்!


தமிழகத்தில் முதன் முறையாக 6 பெண் மேயர்கள் வெற்றிப் பெற்று, பதவியேற்க உள்ளனர். கடந்த 2006ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் என்ற 6 மாநகராட்சிகள் இருந்தன. ஆனால் 2011ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் திருப்பூர், ஈரோடு, வேலூர், தூத்துகுடி உள்ளிட்ட 4 புதிய மாநகராட்சிகள் சேர்த்து கொள்ளப்பட்டன. சென்னை மாநகராட்சியின் எல்லைகளை விரிவுப்படுத்தி 200 வார்டுகளை கொண்ட 'கிரேட்டர் சென்னை' உருவாக்கப்பட்டது. சென்னை மாநகராட்சியை தொடர்ந்து திமுக கைப்பற்றி வந்த நிலையில் இந்த முறை சென்னையையும் சேர்த்து மொத்தமுள்ள 10 மாநகராட்சியிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. 'கிரேட்டர் சென்னை'யின் முதல் மேயராக அதிமுகவின் சைதை துரைசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வெற்றி பெற்றவர்களில் 6 மாநகராட்சிகளின் மேயர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நெல்லை மேயராக விஜிலா, தூத்துக்குடி மேயராக சசிகலா புஷ்பா, வேலூர் மேயராக கார்த்தியாயினி, திருச்சி மேயராக ஜெயா, திருப்பூர் மேயராக விசாலாட்சி, ஈரோடு மேயராக மல்லிகா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...