|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 January, 2013

கலைஞனை காயப்படுத்திப் பார்ப்பது அரசுக்கு நல்லதல்ல!


விஸ்வரூபம் படம் இந்த அளவுக்கு சர்ச்சையில் சிக்க தமிழக அரசே முழுக் காரணம் என்று மூத்த பத்திரிக்கையாளர் ஞானி கூறியுள்ளார். இதுதொடர்பாக தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், கமல்ஹாசன் தனது நிலைப்பாட்டை கூறியிருப்பது மிகவும் வருத்தமான ஒன்றாகும். இந்தப் பிரச்சினைக்கு முழுக் காரணமும் தமிழக அரசுதான். தமிழக அரசு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்ததால்தான் இந்த நிலை. சர்ச்சைக்குரிய படம் என்றால் அதுகுறித்து இஸ்லாமியர்கள் கோர்ட்டுக்குப் போயிருக்க வேண்டும். ஆனால் கமலிடம் அவர்கள் போனால் அரசு கோபப்பட்டு பிரச்சினையை அது தனது கையில் எடுத்துக் கொண்டது. மிகவும் நொந்து போய்தான் கமல் ஹாசன் பேசியுள்ளார். இது வருத்தம் தருகிறது. ஒரு கலைஞனை இப்படிக் காயப்படுத்திப் பார்ப்பது எந்த அரசுக்கும் நல்லதல்ல, சரியல்ல. நீதிமன்றம் மீது நிறைய நம்பிக்கை உள்ளது. இந்தத் தடையை நீதிமன்றம் நீடிக்காது, நீக்கும் என்றே நம்புகிறேன். அதேபோல தமிழக அரசும் பொறுப்புடன் நடந்து கொண்டு கோர்ட் தீர்ப்பை மதித்து நடக்க வேண்டும். தியேட்டர்கள் மீது நடக்கும் தாக்குதல்களை தடுக்க வேண்டியது தமிழக அரசின் பொறுப்பு. சட்டம் ஒழுங்கை தமிழக அரசு தான் பராமரிக்க வேண்டும் என்றார் ஞானி.

 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...