|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 January, 2013

பத்திரிகை சுதந்திரம் 140வது இடத்தில் இந்தியா?

பத்திரிகை சுதந்திரம் குறித்த 179 நாடுகளின் பட்டியலில் இந்தியா 9 இடங்கள் கீழிறங்கி 140வது இடத்தில் உள்ளது. இது, கடந்த 2002ம் ஆண்டுக்குப் பிறகு மிகப் பெரும் வீழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வளவுக்கும் இந்தியா உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று பெயர் பெற்றுள்ளது. உலக அளவிலான 2013ம் வருட பத்திரிகை சுதந்திர குறியீட்டு எண் அடிப்படையில் இந்தியா 140வது இடத்தில் உள்ளது. இது கடந்த ஆண்டை விட 9 இடங்கள் வீழ்ச்சி என்பது குறிப் பிடத்தக்கது. ஊடகவிய லாளர்கள் மீதான தாக்குதல்கள், இணையதள கருத்துச் சுதந்திரம் பறிப்பு, கருத்துகளுக்கு தணிக்கை உள்ளிட்ட காரணிகள் கடந்த வருடம் இந்தியாவில் அதிகரித்துள்ளதாம்.

சீனா ஒரு இடம் மேலேறி 173வது இடத்தில் உள்ளது. பத்திரி கை சுதந்திரம் விவகாரத்தில் வேறு எந்த முன்னேற்றமும் சீனாவில் ஏற்படவில்லை. கடந்த வருடத்தில் இந்தப் பட்டியலில் முதல் மூன்று இடத்தைப் பிடித்த நாடுகள் மூன்றுமே ஐரோப்பிய நாடுகளே. பின்லாந்து, நெதர்லாந்து, நார்வே ஆகியவை பத்திரிகை சுதந்திரத்தைப் பேணிக்காக்கும் உலகின் மிகச் சிறந்த நாடுகள் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.துர்க்மேனிஸ்தான், வட கொரியா, எரித்ரியா நாடுகள் தொடர்ந்து பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை, இணையதளக் கட்டுப்பாடுகள், கருத்து தணிக்கை, காஷ்மீர் மற்றும் சட்டீஸ்கரில் அதிகரிக்கும் பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள், பொதுவாக பத்திரிகையாளர்கள் அச்சுறுத்தப் படுதல் போன்றவை இந்தப் பட்டியலில் வரிசைப்படுத்தப் படும்போது கணக்கில் கொள்ளப் பட்டுள்ளன.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...