|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 May, 2012

இன்டர்நெட் காதல்...?


பேஸ்புக் மூலம் மோசடியாக காதல் வலை வீசி சென்னையைச் சேர்ந்த சில பெண்களிடம் வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் ரூ. 40 லட்சம் வரை சுருட்டியுள்ளனர். ஏமாந்து போன பெண்கள் காவல்துறையின் உதவியை நாடி வந்துள்ளனர்.கண்ணால் கண்டு காதலிக்கும் காலம் ஓல்டு பேஷனாகிவிட்டதால் இப்பொழுது அதிகம் பேர் பேஸ்புக், இண்டர்நெட் மூலம் காதலிக்கத் தொடங்கிவிட்டனர். இதைப் பயன்படுத்தி நைஜீரியா, தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் இருந்து சிலர் மோசடியாக காதல் வலை வீசி பலரையும் ஏமாற்றிப் பணம் கறந்து வருகின்றனர்.இப்படித்தான் சென்னையைச் சேர்ந்த கோடீஸ்வர பெண்கள் இருவர் 40 லட்சம் ரூபாயை பறிகொடுத்துவிட்டு சமீபத்தில் போலீஸ் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு மட்டும் இன்டர்நெட் மூலம் காதல் வலையில் பெண்களை வீழ்த்தி 20.3 லட்சம் டாலர் பணத்தை நூதனமாக திருடியுள்ளதாக தெரிவிக்கிறது போலீஸ் தரப்பு புள்ளிவிபரம்.கண்ணால் கண்டு காதலிக்கும் ஆண்களே சில நாட்களில் காணாமல் போய்விடுகின்றனர். ஆனால் முகமும் தெரியாமல் முகவரி தெரியாமல் இன்றைக்கு பெரும்பாலான பெண்கள் காதல் வலையில் சிக்குகின்றனர். அவர்களின் ஆசை வார்த்தையில் மயங்கி அவர்களின் செலவிற்கு லட்சம் லட்சமாக பணமும் அனுப்பி வைக்கின்றனர்.ஆன்லைன் பேங்கிங் மூலம் பணத்தை பெற்றுக்கொள்ளும் அந்த இளைஞர்களும் கடைசியில் காதலிகளுக்கு டாடா காட்டிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுகின்றன. கடந்த சில வருடங்களாகவே இதுபோன்ற இன்டர்நெட் காதல் மோசடிகள் சைபர் கிரைம் குற்றப்பிரிவுக்கு வந்த வண்ணம் உள்ளன.

சென்னை பெண்கள் இந்த இன்டர் காதலர்களின் வலையில் சென்னையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ என்ற கோடீஸ்வர பெண் சிக்கியுள்ளார். இன்டர்நெட் மூலம் அறிமுகமான காதலனை திருமணம் செய்ய முடிவு செய்து காதலனுக்கு லட்சக்கணக்கில் பணம் அனுப்பியுள்ளார். வரும் ஜுலை மாதம் சென்னையில் திருமணத்தை வைத்துக்கொள்ள இருவரும் முடிவு செய்திருக்கிறார்கள்.திருமணத்துக்குப்பிறகு சென்னையில் தங்கிவிடுவதாக தென் ஆப்பிரிக்க காதலன் விட்ட கதையை கதை விட்டதை நம்பி கோடீஸ்வர குடும்பத்தைச் சேர்ந்த ஜெயஸ்ரீயும் ஆன்லைன் மூலம் பணத்தை அனுப்பியபடி இருந்தார். சென்னைக்கு வந்து குடியேறுவதற்காக தனது உடமைகளை கப்பல் மூலம் கண்டெய்னரில் அனுப்பி வைப்பதாக காதலன் சொல்லி இருக்கிறான். அதற்கான செலவையும் ஜெயஸ்ரீயே ஏற்றுக்கொண்டார்.

கம்பி நீட்டிய காதலன் கப்பலில் அனுப்பும் பொருட்களை எடுத்து வைத்துக்கொள், நான் விமானத்தில் வருகிறேன் என்று காதலன் சொன்ன இனிப்பான கதையை நம்பி ஜெயஸ்ரீ மோசம் போய்விட்டார். காதலன் சொன்னபடி கப்பலில் கண்டெய்னர் வந்தது. ஆனால் கண்டெய்னரை திறந்து பார்த்தபோது, அதற்குள் பொருட்கள் எதுவும் இல்லை. வெறும் பேப்பர் கட்டுகள் மட்டும் இருந்தது.பலவாறாக கதை சொன்ன தென் ஆப்பிரிக்க காதலன் ஜெயஸ்ரீயிடமிருந்து ரூ.25 லட்சம் வரை கறந்துவிட்டு கம்பி நீட்டி விட்டான். அதன்பிறகு அந்த காதலன் ஜெயஸ்ரீயோடு இன்டர்நெட்டில் பேசுவதை நிறுத்திக்கொண்டான்.இந்த காதல் மோசடியில் சிக்கி ரூ.25 லட்சம் பணத்தை பறிகொடுத்த ஜெயஸ்ரீ தனது புகார் மனுவில் காதலன் பெயரையோ, முகவரியையோ, அவனது போட்டோவையோ கொடுக்கவில்லை. எல்லாம் போலி என்றும், அதனால் எதுவும் தெரியாது என்றும் தெரிவித்துள்ளார்.

ரூ. 15 லட்சம் இழந்த பெண் இதேபோல பெயர் சொல்ல விரும்பாத இன்னொரு பெண்ணும், இன்டர்நெட் காதல் வலையில் சிக்கி ரூ.15 லட்சத்தை காதலனிடம் இழந்துவிட்டதாக புகார் கொடுத்திருந்தார். இந்த 2 புகார் மனுக்களும் மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீஸ் விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.இன்டர்நெட், பேஸ்புக், செல்போன் மூலம் காதலிக்கும் கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற காதலில் காதல் ஜோடிகள் முகம், முகவரி தெரியாமல் கூட காதலில் மூழ்கி திளைக்கிறார்கள். இது விபரீதத்தில் முடிகிறது, எனவே பெண்கள் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர். ஆண்களே, பெண்களே முகம் பார்த்துக் காதலியுங்கள், இப்படி மோசம் போகாதீர்கள்..

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...