|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

30 May, 2014

ஆடலாம் பாய்ஸ் காமெடியா ஒரு டான்ஸ்!


வ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு ஃபீலிங் மாதிரி ஒவ்வொரு நடிகருக்கும் டான்ஸ்ல சில வித்தியாச ஸ்டெப்ஸ் உண்டு. வாங்க அதைக் கொஞ்சம் விலாவரியா பார்ப்போம்.எம்.ஜி.ஆர்: கை இல்லாமல் ஆட மாட்டார். வானத்தைக் காட்டுவார், பூமியைக் காட்டுவார், மரத்தைக் காட்டுவார், குளத்தைக் காட்டுவார். காட்டு காட்டு காட்டுனு காட்டுவார். ஹீரோயின் நின்றால் புத்தூர் கட்டு போடும் அளவுக்கு உலுக்கி எடுப்பார். மாங்காய் திருடினது ஒரு குத்தமாய்யா? அதுக்கு ஈவ்டீசிங் ஸ்டெப்ஸ் போட்டு மிரளவைப்பார். சந்தேகம்னா 'உரிமைக்குரல்’ படத்தில் வரும் 'பொண்ணாப் பொறந்தா...’ பாட்டைப் பாருங்க. மைண்ட் புளோயிங்! 

சிவாஜி: டான்ஸிலும் புது வெரைட்டி காட்டியவர் இவர். சோகப் பாட்டிலும் முகத்தில் நிறைய எக்ஸ்பிரஷன்களோடு ஆடுவார். ரொமான்ஸ் பாடல்களில் குட்டி யானை போல நடந்து ஹீரோயினைக் காதலோடு பார்த்து உதட்டைக் கடிப்பார். (அவரோட உதட்டைத்தான்) அடிக்கடி காலை அகற்றி நின்று இரண்டு கைகளையும் மேலே தூக்கி 'ஓ ஜீசஸ்... ஃபர்கிவ் மீ’ எக்ஸ்பிரஷன் கொடுப்பார். உதாரணத்திற்கு நெஞ்சு வரைக்கும் பேன்ட் போட்டு சீ த்ரூ சட்டையைப்போட்டு இவர் ஆடிய எங்கே நிம்மதி... 'புதிய பறவை’ படத்தின் பாடல் அக்மார்க் சிவாஜி ஸ்கூல் ஆஃப் டான்ஸ். 'பாட்டும் பரதமும்’ என்ற படத்தில் 'சிவகாமி ஆட வந்தால்...’ பாடலுக்கு அவர் ஆடிய பரதத்தில் நவரசத்தையும் வெறும் காலால் எட்டி உதைப்பார்.
ரஜினி: காற்றிலே சைக்கிள் ஓட்டுவார். பம்பரம் விடுவார். குழந்தைபோல ஓடுவார். மியூட்டில் இருந்தாலும் என்ன பாட்டுக்கு ஆடுகிறார் என்பதை கைகளாலும் விரல்களாலும் செய்கையின் மூலமே விளக்கிடு வார். உதாரணத்திற்கு 'ஒருவன் ஒருவன் முதலாளி...’ போல பல பாடல்கள் இருக்கின்றன. நகம் கடித்து வெட்கப்படுவதில், சரோஜாதேவியையே மிஞ்சிவிடுவார் தலைவர்.சத்யராஜ்: தன் க்ளோஸ் ஃப்ரெண்ட் கவுண்டமணியின் ஸ்டெப்ஸ்களை இரவல் வாங்கித்தான் பல படங்களில் ஆடுவார். டான்ஸ் நடுவில் எப்போதும் 'அட்டென்ஷன்’ 'ஸ்டேண்ட்டடீஸ்’ பொசிஷனுக்கு கொஞ்சம் பக்கத்தில் போய் வருவதுபோல் கையைக் காலை உதறுவார். அது சில நேரங்களில் அழுது அடம்பிடிக்கும் குழந்தையைப்போலவே இருக்கும். அவரே டைரக்டர் அவதாரம் எடுத்து மிரட்டிய 'வில்லாதி வில்லன்’ படத்தைப் பாருங்க. நக்மாவோட 'தீம்தலக்கடி தில்லாலே...’னு ஒரு டெரர் பாட்டு இருக்கு. சும்மா ரோல்கால் பரேடு போயிருப்பார் நம்ம புரட்சித் தமிழன்.
பிரபு: தன் குழி விழுந்த கன்னத்தைக் காட்டாமல், ஆடவே மாட்டார். கன்னக்குழியை விரலால் குத்திக் காட்டுவார். இடுப்பை ஆட்டிக் காட்டுவார். தொடையைத் தட்டுவார். உடம்பைக் கஷ்டப்பட்டாவது 'உக்கி’ போடுவது போல அடிக்கடி உட்கார்ந்து எழுந்திருப்பார். அழகு காட்டி பழிப்புக் காட்டி பெண்கள் போல நடந்து ஆடுவதெல்லாம் இளைய திலகத்துக்கு இளநீர் குடிப்பதுபோல. சந்தேகம்னா சின்னத்தம்பி படத்தில் வரும் 'அரைச்ச சந்தனம்... மணக்கும் குங்குமம்...’ பாட்டை ஒரு வாட்டிப் பார்த்துத் தெளிஞ்சுக்கோங்க பாஸ்.ராமராஜன்: டான்ஸைவிட கான்ட்ராஸ்ட் கலர்களால் சிதறவிடுவார். கைகளைக் கட்டிக்கொள்வார். மூன்று விரல்களை அடிக்கடிக் காட்டிக் காட்டி ஏதோ இந்த உலகத்துக்குச் சொல்ல வருவார். பெரும்பாலும் இரண்டு கைகளால் முட்டுக்கொடுத்து வகையாக நின்றபடி ஆடுவார். சிவப்பு சட்டை, ஊதா பெல்ட், பச்சை பேன்ட், வெள்ளை ஷூ என கண்ணைக் குத்தும் அவரோட பிராப்பர்ட்டி.
டி.ஆர்: வயதுக்கு மீறி ஸ்டெப்ஸ் போட்டு இவர் ஆடுவதைப் பார்த்தால், பயங்கரமாக இருக்கும். இடுப்பை ஆட்டி ஆட்டி கையைத் தலைக்கு மேல் தூக்கி டவுசர் தெரிய ஆடுவார். தலையை அடிக்கடி சிலுப்புவார். தரையில் தவழ்வார், உருள்வார், புரள்வார். ஆனால் ஸோலோவாக. விரகதாப எக்ஸ்பிரஷன்களை டெரராய்க் கொடுக்கும் இவர் பேசாமல் ஹீரோயின்களை தொட்டே ஆடியிருக்கலாம். அப்படி கொலைக்குத்து மூவ்மென்ட் மற்றும் பார்வையோடு இருக்கும் இவரின் டான்ஸ் ஸ்டைல்.  'டிஆர் டான்ஸ் கங்னம் ஸ்டைல்’ என்று யூடியூபில் தட்டிப் பாருங்கள். இதய பலவீனமானவர்கள் அந்த வீடியோ பார்ப்பதைத் தவிர்ப்பது நல்லது!

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...