|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 February, 2012

ஐ.சி.சி. பரிசுத்தொகையை பெற போட்டி!


ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 1 ந்தேதி நிலவரப்படி தரவரிசையில் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பரிசுத்தொகையை வழங்கி கவுரவிக்கும்.இந்தவகையில் ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் தற்போது ஆஸ்திரேலியா 129 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. முதலிடத்தில் வலுவாக உள்ள அந்த அணி ஒரு நாள் போட்டி சாம்பியன்ஷிப் கோப்பை மற்றும் ரூ.87 லட்சம்பரிசுத்தொகையை பெறப்போவது உறுதி.

ஆனால் 2 வது இடத்திற்கு வழங்கப்படும் ரூ.37 லட்சத்தை தட்டிச்செல்ல தான் 3 அணிகள் இடையே போட்டி நிலவுகிறது. தரவரிசையில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா தலா 116 புள்ளிகள் பெற்றிருந்தாலும், மயிரிழையில் இந்தியா 2 வது இடத்தில்உள்ளது. தென்ஆப்பிரிக்கா 3 வது இடத்திலும், இலங்கை 113 புள்ளிகளுடன் 4 வது இடத்திலும் உள்ளன.முத்தரப்பு தொடரில் அடுத்தடுத்த தோல்விகளால் வீழ்ச்சிக்குள்ளாகி இருக்கும் இந்திய அணி, எஞ்சிய ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் தான் நம்பர் 2 இடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும். இல்லாவிட்டால் இலங்கை அல்லதுதென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளில் ஒன்று 2 வது இடத்திற்கு முன்னேறி விடும். தென்ஆப்பிரிக்க அணி விரைவில் நிழூசிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...