|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 February, 2012

சைக்கிளின் விலை ரூ.43 ஆயிரம்

சைக்கிள் தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஹீரோ குழும நிறுவனம் முதல் முறையாக "ரெட் டாட்' என்ற பெயரில் விலை உயர்ந்த சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. நகர்ப்புற இளைஞர்களை இலக்காகக் கொண்டு சந்தைக்கு வந்துள்ள இந்த சைக்கிளின் விலை ரூ. 43 ஆயிரமாகும்.  முழுவதும் கார்பன் ஃபிரேமினால் இந்த சைக்கிள் தயாரிக்கப்பட்டுள்ளது. கார்பனில் தயாரிக்கப்பட்டு இவ்வளவு குறைவான விலைக்கு இந்தியாவில் விற்கப்படும் சைக்கிள் இது என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பங்கஞ் முஞ்சால் தெரிவித்துள்ளார்.  பொதுவாக ஃபார்முலா 1 ரேஸ்களில் பங்கேற்கும் கார்கள் மட்டுமே கார்பன் ஃபிரேம் கொண்டவை.  இப்போது ஹீரோ அறிமுகப்படுத்தியுள்ள சைக்கிளில் முதல் முறையாக கார்பன் பிரேம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் எடை 12 கிலோ. அலாய் சக்கரம், டிஸ்க் பிரேக், கியர் வசதி உள்ளிட்ட பல மேம்பட்ட அம்சங்கள் உள்ள இந்த சைக்கிள் நீலம், வெள்ளை, கருப்பு நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...