|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 February, 2012

எதை இழக்கவே கூடாது?

வாழுகின்ற நாட்களில் எதை எதையோ இழக்கின்றோம். மதிப்புமிக்க பொருட்களை இழக்கின்றோம்; அரிய நட்பை இழக்கின்றோம். ஏன், பந்த பாசங்களைக் கூட இழக்கின்றோம். எந்த ஒன்றை இழந்தாலும் மனம் வேதனைப்படுகிறது. ஆனாலும், காலமும் நேரமும் நமக்கு சாதகமாக இருக்கும்போது இழந்த சிலவற்றைத் திரும்பப் பெறுகின்றோம். மனம் குதூகலமாகிறது.  நம்மிடம் இருக்கும் செல்வத்தை இழப்பது, ஒன்றையும் இழப்பதாகாது. நம்முடைய உடல் நலத்தை இழப்பது ஏதோ சிறிதளவு இழந்ததாகக் கொள்ளப்படும். ஆனால், நம்மிடம் இருக்கின்ற நற்குணத்தை இழந்துவிட்டால் எல்லாவற்றையும் இழந்ததற்கு ஒப்பாகும். வாழ்க்கைத் தத்துவத்தை இதைவிட எளிமையாகச் சொல்ல முடியாது. வாழ்வாதாரத்துக்கே அடிப்படையான செல்வத்தை இழந்தால்கூட ஒன்றுமில்லையாம். தேக நலனில் இழப்பு வந்தால்கூட, ஏதோ சிறிதளவைத்தான் நாம் இழந்ததாகக் கொள்ள வேண்டுமாம். ஆனால், நம்மிடம் ஒட்டிக் கொண்டுள்ள நற்குணங்களை இழப்பது என்பது எல்லாவற்றையும் இழந்ததற்கு சமமாகும். ஆக, நல்ல குணங்களைக் கொண்டு வாழும் வாழ்க்கை என்றைக்கும் போற்றுதலுக்குரியது. நற்குணங்களைக் கொண்டிருக்கும் ஒருவன் என்றைக்குமே பிறரால் வஞ்சிக்கப்பட மாட்டான்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...