|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 March, 2011

சிக்கலில் உளவு பிரிவு போலீசார்

ராமநாதபுரம்: தமிழகத்தில் தேர்தல் நெருங்குவதை தொடர்ந்து, தி.மு.க., காங்., இடையே ஏற்பட்டுள்ள மாறுதலால், உண்மை தகவல்களை அரசுக்கு தெரிவிப்பதில் உளவு பிரிவு போலீசாருக்கு சிக்கல் அதிகரித்து <உள்ளது.

தேர்தல் கூட்டணி தொடர்ந்து இழுபறிநிலையில் உள்ளதால் இதன் நிலை நாளுக்கு நாள் மாறி வருகிறது. தற்போது தி.மு.க.,-காங்., இடையே ஏற்பட்டுள்ள முறிவு மேலும் பல மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளதுடன் ,அ.தி.மு.க.,வினர் ஏக குஷியில் உள்ளனர். காங்., தனித்தோ ,அ.தி.மு.க., கூட்டணியிலோ போட்டியிடலாம் . எப்படி நின்றாலும் பாதிப்பு தி.மு.க.,விற்குதான் என்பதால், இது அ.தி.மு.க.,விற்கு சாதகமான சூழலை உருவாக்கி உள்ளது.

ஏற்கனவே உளவு பிரிவு ,தி.மு.க.,விற்கு சாதகமான தொகுதிகள் குறித்து ரிப்போர்ட் தயார் செய்த நிலையில், தற்போதைய சூழலில் மீண்டும் அடுத்தகட்ட ரிப்போர்ட் தயார் செய்து வருகின்றனர். இந்த ரிப்போர்ட் முன்பைவிட மோசமான நிலையில் இருப்பதால் ,அரசுக்கு உண்மையான தகவல்களை தெரிவிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஒவ்வொரு மாவட்ட உளவு பிரிவினரும் அடுத்த மாவட்ட உளவு பிரிவினரை தொடர்பு கொண்டு, "அங்கு நிலைமை எப்படி உள்ளது,' என கேட்டு, இரண்டு மூன்று மாவட்ட போலீசாருடன் ரகசிய டிஸ்கஷன் செய்து, குத்துமதிப்பான ரிப்போர்ட் அனுப்பும் நிலை உருவாகியுள்ளது. இதில் அரசு ஊழியர்களும் தங்கள் பங்கிற்கு, தேர்தல் நிலவரம் எப்படி மாறும் என்பது குறித்து ,ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மின்வாரியம் உள்ளிட்ட பல்வேறு சங்கத்தினரிடம் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...