|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 March, 2011

முத்துக்கு முத்தாக..திரை விமர்சனம்


இளவரசு, சரண்யா, இவர்களுக்கு ஐந்து ஆம்புளைப் புள்ளைக, அல்லாரும் ஒண்ணு மண்ணா ஒருத்தருக்கு ஒருத்தர் வுட்டுக் கொடுக்காம பயபுள்ளைக பாசத்தில விளையாடுதுங்க, குளிக்குதுங்க, ததும்பி வழியுதுங்க. இப்படி பட்ட நேரத்தில ஒவ்வொரு புள்ளைகளுக்கும் கல்யாணம் செய்து வைக்க, அதது தனிக்குடித்தனம் போவுதுங்க. தனிதனித் குடும்பம்னு ஆனப்புறம்

மருமகளுங்க சுயநலமியா மாற ஆரம்பிச்சிடுறாங்க. பொறவு என்னங்கிறதை மனசை உருக்குற மாரி ஒரு க்ளைமாக்ஸுல சொல்லியிருக்காங்க
சரண்யா,இளவரசும் தங்கள் கேரக்டர் உணர்ந்து நடித்திருப்பது படத்திற்கு மிகப் பெரிய பலம். மூத்த பையன் நட்ராஜ் தன் மனைவியிடம் கையாலாகாமல் நிற்கும் காட்சியிலும், அவளுடன் சண்டை போடும் காட்சியில் பேசும் வசனம் அருமை. அடுத்த ஜென்மத்திலேயாவது நீ ஆம்பளை பொறக்கணும்டி.. அப்பத்தான் ஒரு ஆம்பளையோட வலி தெரியும்ங்கிற வசனத்துக்கு தியேட்டரில் கிடைக்கும் கைத்தட்டலே சாட்சி.

நிச்சயம் முப்பது வயதுக்கு மேற்ப்பட்ட ஆண்களுக்கு தங்களைப் பற்றி எண்ணங்களை அசைப் போட இந்த படம் ஏதுவாக இருக்கும்.  வழக்கமாய் இம்மாதிரி படங்களை டிவி சீரியல்கள் தான் குத்தகைக்கு எடுத்திருந்தது. இப்போதெல்லாம் அவர்கள் ஒரு ஹீரோயினுக்கு மூன்று புருஷன், ரெண்டு கள்ளக் காதலன், இன்னொருத்தன் பொண்டாட்டிய தன் புருஷனுக்கு கூட்டிக் கொடுக்கிறது போன்ற குடும்ப கதைகளில் போய்விட்டதால். இதை டிவி சீரியல் என்றும் சொல்ல முடியவில்லை.  

நன்றி; கேபிள் சங்கர்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...