|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

05 March, 2011

மழையால் போட்டி ரத்து! *இலங்கை, ஆஸி.,க்கு ஒரு புள்ளி

கொழும்பு: இலங்கை, ஆஸ்திரேலியா மோதிய உலக கோப்பை லீக் போட்டி, மழை காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இலங்கை கேப்டன் சங்ககராவின் அரைசதம் வீணானது.
இந்திய துணைக் கண்டத்தில் பத்தாவது உலக கோப்பை தொடர் நடக்கிறது. நேற்று கொழும்புவில் நடந்த "ஏ' பிரிவு லீக் போட்டியில் "நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதின.
மெண்டிஸ் வாய்ப்பு:
இலங்கை அணியில் குலசேகரா நீக்கப்பட்டு, அஜந்தா மெண்டிஸ் வாய்ப்பு பெற்றார். தொடர்ந்து 31 உலக கோப்பை போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணியில், மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சங்ககரா "பேட்டிங்' தேர்வு செய்தார்.
"டாப்-ஆர்டர்' சரிவு:
துவக்கத்தில் ஆஸ்திரேலிய "வேகங்கள்' பிரட் லீ, ஷான் டெய்ட் அனல் பறக்க பந்துவீசினர். போட்டியின் இரண்டாவது ஓவரை டெய்ட் வீச, முதல் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார் தில்ஷன். இதையடுத்து வார்த்தை போரில் ஈடுபட்டார் டெய்ட். பதிலுக்கு தில்ஷனும் ஏதோ சொல்ல, அம்பயர்கள் தலையிட்டு சமாதானம் செய்தனர். நான்காவது பந்தை அவசரப்பட்டு அடித்த தில்ஷன்(4) பரிதாபமாக வெளியேறினார். அடுத்து பிரட் லீ வேகத்தில், ஸ்டீவன் ஸ்மித்தின் சூப்பர் "கேட்ச்சில்' தரங்கா(6) காலியானார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது. இம்முறை ஸ்டீவன் ஸ்மித்தின் துல்லிய "த்ரோவில்' ஜெயவர்தனா(23) ரன் அவுட்டானார். இப்படி "டாப்-ஆர்டர்' விரைவில் சரிய, இலங்கை அணி 3 விக்கெட்டுக்கு 75 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
மழை குறுக்கீடு:
இதற்கு பின் சங்ககரா, சமரவீரா சேர்ந்து படுநிதானமாக ஆடினார். இலங்கை அணி 32.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 146 ரன்கள் எடுத்திருந்த போது, பலத்த மழை பெய்தது. இதையடுத்து ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது சங்ககரா(73), சமரவீரா(34) அவுட்டாகாமல் இருந்தனர். மழை தொடரவே, போட்டி ரத்து செய்யப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

"இன்னொரு ரோட்ஸ்'
ஆஸ்திரேலிய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளரான ஸ்டீவன் ஸ்மித்(21 வயது), நேற்று பீல்டிங்கில் அசத்தினார். தரங்கா கொடுத்த "கேட்ச்சை' ஒரே கையில் பிடித்த இவர், ஜெயவர்தனாøவுயும் ரன் அவுட்டாக்கினார். துடிப்பாக பந்தை தடுத்த இவர், இலங்கை அணியின் ரன் வேகத்துக்கு முட்டுக் கட்டை போட்டார். சுருக்கமாக சொன்னால், தென் ஆப்ரிக்காவில் முன்னாள் வீரர் ஜான்டி ரோட்சை போல "பீல்டிங்கில்' பட்டையை கிளப்பினார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...