|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

01 April, 2011

மக்கள் சக்தி

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தங்கள் தொகுதி மக்களுக்கு சேவை செய்யும் புதிய அரசியல் கொள்கையுடன் மக்கள் சக்தி இந்த தேர்தலில் பங்கேற்கவுள்ளது.

மக்கள் சக்தி வெல்லும்; வரலாறு அதை சொல்லும் என்ற தாரக மந்திரத்துடன் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் மக்கள் சக்தி இயக்கம், 18 மாவட்டங்களில் 36 வேட்பாளர்கள் நிறுத்தியுள்ளது. இவர்களில் 80 சதவீதம் பேர், ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வரலாற்று பின்னணியைக் கொண்டவர்கள். மேலும் மது போன்ற போதை வஸ்து பழக்கங்கள் அற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வயது குறைந்த இளைஞர் முதல் வயது மூத்த மற்றும் அனுபவம் மிக்க பேராசிரியர் வரை அனைத்து தரப்பினரும் போட்டியிடுவது இவ்வியக்கத்தின் சிறப்பம்சம். வேட்பாளர்களில் மிகவும் குறைந்த வயதுடையவரான வி. விஸ்வநாதன் (27) கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் போட்டியிடுகிறார்.

மிகவும் அதிக வயதுடைய வேட்பாளர் கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிடும் டாக்டர் இளங்கோ பாலகிருஷ்ணன். இவர் பாரதியார் பல்கலை., முன்னாள் துணைவேந்தர், திருச்சி மண்டல பொறியியல் கல்லூரி முதல்வர், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்தவராவார். தற்போது நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள்அனைவரும் தங்கள் தொகுதியில் வெற்றி பெற்றாலும் தோல்வி அடைந்தாலும், அடுத்த ஐந்தாண்டுகளுக்கு தங்கள் தொகுதிகளில் மக்களுக்கு சேவை செய்ய நியமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...