|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 May, 2011

"இரண்டு முறை சாம்பியன் பட்டம்" - வரலாறு படைக்குமா சென்னை கிங்ஸ் அணி

ஐ.பி.எல்., தொடரில் இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் அணி என்ற வரலாறு படைக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி காத்திருக்கிறது. தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ள சென்னை அணிக்கு, இம்முறை பைனல் சொந்த மண்ணில் நடப்பது சாதகமான விஷயம்.
நான்காவது ஐ.பி.எல்., தொடர் இந்தியாவில் நடக்கிறது. நேற்று முன் தினம் மும்பையில் நடந்த முதலாவது "பிளே-ஆப்' போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை சந்தித்தது. இதில், முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 175 ரன்கள் எடுத்தது. 

அடுத்து களமிறங்கிய சென்னை அணிக்கு கடைசி 18 பந்துகளில் 53 ரன்கள் தேவைப்பட்டன. இது சாத்தியமில்லை என்று தான் பலரும் நினைத்தனர். ஆனால், சுரேஷ் ரெய்னா(73) மற்றும் ஆல்பி மார்கலின்(28) அதிரடி கைகொடுக்க, 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து வென்றது. இதன் மூலம் சென்னை அணி, மூன்றாவது முறையாக பைனலுக்கு(2008, 2010, 2011) முன்னேறி அசத்தியது. வரும் 28ம் தேதி நடக்கும் பைனலில் மீண்டும் வெல்லும் பட்சத்தில் ஐ.பி.எல்., கோப்பையை தொடர்ந்து இரண்டு முறை வென்ற முதல் அணி என்ற பெருமையை பெறலாம்.

இம்முறை லீக் சுற்றில், இங்கு நடந்த 7 போட்டிகளிலும் சென்னை தான் வென்றது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு மற்றும் ராசியான சேப்பாக்கம் மைதானம் மீண்டும் அணிக்கு கைகொடுக்கலாம். தவிர, கேப்டன் தோனியின் வியூகம், அஷ்வின் சுழல், ரெய்னா, மார்கல், முரளி விஜய் ஆகியோரது அதிரடி எடுபடும் பட்சத்தில் சென்னை அணி, உள்ளூரில் கோப்பை கைப்பற்றலாம்.
இது குறித்து

 அணியின் முன்னணி வீரர் மைக்கேல் ஹசி கூறுகையில்,""சேப்பாக்கம் ஆடுகளத்தில் துவக்கத்தில் அதிரடியாக ஆடலாம். போகப் போக பந்து, பேட் நோக்கி வரும் வேகம் குறைந்து விடும். பந்துக்காக காத்திருந்து பேட் செய்ய வேண்டும். இதற்கேற்ப விளையாட கற்றுக் கொண்டதால் தான், உள்ளூரில் சென்னை அணி வலிமையானதாக திகழ்கிறது. ஆடுகளத்தின் இந்த தன்மையை புரிந்து கொண்டு விளையாட மற்ற அணிகள் சிரமப்பட வேண்டியிருக்கும்,''என்றார்.
சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறுகையில்,""அணியின் "மிடில்-ஆர்டர்' பலமாக இருப்பதால் தான் இக்கட்டான நிலையிலும் வெற்றி பெற முடிகிறது. சுழற்கூட்டணிக்கு அஷ்வின் தலைமை ஏற்கிறார். இவருக்கு பக்கபலமாக ஜகாதி உள்ளார். ஆல்பி மார்கல், பிராவோ, போலிஞ்சர் போன்ற வேகங்கள் இருப்பதால், எத்தகைய சவாலையும் சந்திக்க தயாராக உள்ளோம்,''என்றார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...