|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 June, 2011

ஜப்பான் மொழி வழி தமிழ் நூல் வெளியீடு!


ஹாங்காங் வாழ் தமிழரான சித்ரா சிவகுமாரும் அவருடைய தோழி ஷாலினியும் இணைந்து ஜப்பானிய மொழி வழி தமிழ் என்ற நூல் சென்னையில் வெளியிடப்பட்டது. அமைந்தகரை, நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தோசோகாய் வளாகத்தில் நடைபெற்ற விழாவில் சென்னையில் உள்ள ஜப்பானிய தூதரக அதிகாரி கயோகா புருகவா தலைமையில் சென்னையில் உள்ள மயேகவா இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் யசுனோரி ஹிராசகோ, இந்த நூலை வெளியிட்டார். இந்த நூலில் ஜப்பானியர்கள் எளிதாக தங்கள் மொழி மூலம் தமிழைக் கற்கும் வகையில் உரிய படங்களும் உள்ளன.

கலைப்பொருள் கண்காட்சி: இதையொட்டி கலைப்பொருள் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை, சென்னையில் உள்ள ஜப்பான் தூதர் கயோகோ புருகுவா துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். வீட்டு ஆபரணப் பொருட்கள், ஜப்பான் நாட்டின் கலாசாரத்தை எடுத்துக் காட்டும் கலைநயப் பொருட்கள், பூங்கொத்துகள், பல்வேறு கலைநுட்பத்துடன் கூடிய மலர்கள், இயற்கை எழில்மிகு வண்ணக் காட்சிகள் போன்றவை ஜப்பான் களிமண்ணால் செய்யப்பட்டு, கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள கலைப்பொருட்கள் எவ்வாறு செய்யப்பட்டது என்ற செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
கண்காட்சியை நடத்திய ஜெனிபர் ராஜ்குமார் கூறுகையில், நான் திருமணமாகி ஜப்பான் சென்றபோது, அந்ந நாட்டின் கலை வடிவம் என்னை வெகுவாக ஈர்த்தது. அங்கு களிமண்ணால் கலைப்பொருட்கள் செய்வதற்கு ஐந்து வருடப் படிப்பு இருக்கிறது. அதை முழுமையாக படித்து, ஏழு சான்றிதழ்கள் பெற்றேன். பின், மூன்று வருடங்கள் அதே பயிற்சி நிலையத்தில், ஆசிரியராக வேலை பார்த்தேன். அந்நிறுவனம், பல்வேறு நாடுகளில் ஜப்பானிய களிமண் கலைப்பொருட்களின் கண்காட்சி நடத்தியது. நம் நாட்டு மக்களும் அந்த கலைநயத்தை அறிய வேண்டும், அதன் செய்முறையை புரிந்துகொள்ள வேண்டும். பல்வேறு நாட்டு கலைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இங்கு கண்காட்சி நடத்துகிறேன். இக்கண்காட்சியில் பங்கேற்ற பலர், அவர்களுக்கும் கலைப் பொருட்கள் செய்யும் பயிற்சியை கற்றுத் தரும்படி கேட்டனர், என்றார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...