|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 June, 2011

ஈழப் பிரச்சினையில் ஜெயலலிதாவுக்கு கடைசி வரை துணை நிற்போம்-சீமான்!

சென்னை ஈழப் பிரச்சினை தொடர்பாக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கடைசி வரை நாங்கள் துணை நிற்போம்.

ஈழத் தமிழர்களை கொன்றழித்த இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும், ராஜபக்சேவை தண்டிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி சென்னை சைதாப்பேட்டையில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது.கட்சித் தலைவர் சீமான், இயக்குநர்கள் மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் சீமான் பேசியதாவதுஇலங்கை அதிபர் ராஜபசேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக் கோரியும் இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என வலியுருத்தியும் தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.

தேர்தல் நேரத்தில் இலங்கைப் பிரச்சனைக்கு தனி ஈழம்தான் தீர்வு என ஜெயலலிதா கூறியிருந்தார். அதை தேர்தல் நேரத்துப் பசப்பு வார்த்தைகள் என அப்போது சிலர் கூறினர். தேர்தலில் அதிமுக வென்றதோடு மட்டுமல்லாமல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தையும் சட்டப் பேரவையில் நிறைவேற்றியபோது, இது வெறும் தீர்மானத்தோடு நின்றுவிடும் என்றும் சிலர் கூறினர்.

ஆனால் அண்மையில் டெல்லிக்குச் சென்ற முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அளித்த முதல் கோரிக்கையே இலங்கைப் பிரச்சனை பற்றித்தான். அதனால் ஈழப் பிரச்சனையில் நல்ல தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை தமிழர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது.

சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் கடைசி வரை நாங்கள் துணை நிற்போம்.இதே நிலை நீடித்தால் அடுத்த மூன்று ஆண்டுகளில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகம், புதுவையில் உள்ள 40 தொகுதிகளையும் அதிமுகதான் கைப்பற்றும் என்பது நிச்சயம்.

காங்கிரஸ் கட்சியின் தயவு அதிமுகவுக்குத் தேவையில்லை. அதிமுகவின் தயவுதான் காங்கிரஸ் கட்சிக்குத் தேவை. எனவே அதிமுக ஒருபோதும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கக்கூடாது. காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்தேன். அதே நேரத்தில் இரட்டை இலைக்கு ஓட்டுப்போடுங்கள் என்று வாக்கு சேகரித்தேன். இதனால் என்னை நிறைய பேர் கேலி செய்தார்கள். அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன். இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்ததற்காக இப்போது பெருமைப்படுகிறேன்.

ஈழப்பிரச்சனைக்கு குரல் கொடுப்பார் புரட்சித்தலைவி என்று எதிர்ப்பார்த்திருந்தோம். எங்கே செய்யாமல் விட்டுவிடுவாரோ என்று பயமும் இருந்தது. ஆனால் சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தது மட்டுமல்லலாமல் பிரதமரிடம் கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார் என்றார் சீமான்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...