|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

10 June, 2011

எல்டிடிஇ கொடிக்குத் தடையில்லை!

விடுதலைப் புலிகளின் கொடிக்கு பிரிட்டனில் தடை விதிக்கப்படவில்லை என்று அந்த அந்நாட்டு சட்ட வல்லுநர்கள் உறுதி செய்துள்ளனர். பிரிட்டனின் அதிகாரங்களுக்கு உட்பட்ட வேல்ஸ், ஸ்காட்லாண்ட் மற்றும் வட அயர்லாந்து என எந்த பகுதியிலும் தமிழர்களின் தேசியக் கொடிக்கு தடை ஏதும் இல்லை என்பதும் தேசியக் கொடி வைத்திருந்தால் கைதுசெய்து தண்டனைக்கு உட்படுத்த முடியாது என்பதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

ஆனால் போராட்டங்களில் காவல்துறையும் ஆதரவு தரவேண்டுமானால் தேசியக் கொடியை அனைத்துவிதமான போராட்டங்கள் மற்றும் நிகழ்வுகளில் முன்னிலைப்படுத்த வேண்டும். இதனை தமிழர் அமைப்புக்கள் முன்னெடுத்துச் செய்ய வேண்டும் என அந்தக் குழு யோசனை தெரிவித்துள்ளது. புலிகள் வேறு, மக்கள் வேறு. புலிக்கொடி தமிழர் கொடியல்ல. அது பிரிட்டனில் தடை செய்யப்பட்டுவிட்டது என தமிழர்கள் சிலரே தொலைக்காட்சிகளில் பிரச்சாரம் செய்து வந்தனர்.

இதனால் பிரிட்டனில் நடக்கும் போராட்டங்களில் புலிக்கொடியை காட்டுவதை தவிர்க்கத் தொடங்கினர். ஆனால் தடை செய்யப்பட்ட கொடியாக இருந்தால் அதனா பிபிசி உள்ளிட்ட ஊடகங்களில் அதைக் காட்டியிருக்க மாட்டார்கள். ஆனால் பிபிசி இந்தக் கொடியை தொலைக்காட்சிகளில் காட்டி வந்தது. எனவே இந்தக் கொடி பிரிட்டனில் தடை செய்யப்படவில்லை என்பது தெளிவாகியுள்ளது. இதனை விடுதலைப் புலிகள் தரப்பும் விளக்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...