|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 June, 2011

சர்வரோக நிவாரணி - எலுமிச்சை!

1. மூலிகையின் பெயர் :- எலுமிச்சை.
2. தாவரப்பெயர் :- CITRUS MEDICA.

3. தாவரக்குடும்பம் :- RUTACEAE.

4. பயன்தரும் பாகங்கள் :- இலை மற்றும் பழம்

5. வளரியல்பு :- எலுமிச்சை தென்கிழக்கு ஆசியாவை தாயகமாகக் கொண்டது. இமையமலை அடிவாரத்திலிருந்து பரவி மேற்குத் தொடர்ச்சி மலை வரை கடந்தது. எலுமிச்சை முள்ளுள்ள சிறு மர வகுப்பைச் சார்ந்தது. சுமார் 15 அடிவரை வளரும். தமிகம் முழுதும் வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. செம்மண்ணில் நன்கு வளரும். இதில் பலவகையுண்டு நாட்டு எலுமிச்சை, கொடி எலுமிச்சை மலை எலுமிச்சை எனப் பலவகையுண்டு. எல்லாவற்றிக்கும் குணம் ஒன்று தான். எதிர் அடுக்கில் இலைகள் அமைந்திருக்கும். பூ விட்டுக் காய்கள் உருண்டை மற்றும் ஓவல் வடிவத்திலும் இருக்கும். முற்றினால் மஞ்சள் நிறத்தில் இருக்கும். எலுமிச்சையை அரச கனி என்பர். இதன் பயன்பாடு கருதியும் மஞ்சள் நிற மங்களம் கருதியும் இப்பெயர் வைத்தனர். கடவுளுக்கு மிக உகந்தது. வழிபாட்டில் வரவெற்பிலும் முதன்மை வகிப்பது. விதைமூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

6. மருத்துவப்பயன்கள் :- பொதுகுணமாக பித்தம் போக்கும், சித்தம் ஆக்கும், அறிவை வளர்க்கும், மந்திரம் செய்ய பில்லி, சூனியம் எடுக்க பேய் விரட்ட, இறையருள் கூட்ட ஏற்றது. வாந்தி, விக்கல், வயிற்றோட்டம், ஆகியவற்றைக் குணமாக்கும். பைத்தியம் தெளிவிக்கும். சித்த மருந்துகளில் துணை மருந்தாகப் பயன்படும். பிற மருந்துகள் கெடமல் பாதுகாக்கப் பயன்படுத்தப்படும். அதிகமாகப் பயன்படுத்தினால் சுண்ணாம்புச் சத்தைக் கரைத்து எலும்பை ஆற்றல் இழக்க வைக்கும். விந்தை நீர்த்துப்கோக வைக்கும். இதன் சாறு டீயுடன் சேர்த்தால் தனி சுவையுண்டு.

பழச்சாறு, கரிசலாங்கண்ணிச் சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் ஒன்றரை லிட்டர் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி வடித்துத் தலைமுடிக்குத் (6 மாதம்) தடவி வர நரைக்காமல் நீண்டு அடர்ந்து வளரும். பழச்சாற்றை கண், காதுவலிக்கு 2 துளிகள் விட்டுவரக் குணமாகும்.

பழச்சாற்றில் சீரகத்தை ஊறவைத்து பின் காயவைத்து, தேவையான போது சுவைத்து வரப் பித்த மயக்கம், குமட்டல், பித்தவாந்தி, நாவில் சுவையின்மை, வயிற்றுப்போக்கு ஆகியவை தீரும். நகச்சுற்றுக் விரலில் செருகி வைக்கப் பழுத்து உடையும்.

வயிற்றோட்டம், வாந்திக்கு எலுமிச்சம்பழம் நல்ல மருந்தாகும். சர்கரைசேர்த்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் ஒரு கிராம் அளவு உப்பு சேர்த்து இருவேளை கொடுக்க வாந்தி, வயிற்றோட்டம் குணமாகும். வைரஸ் தொற்று இருந்தால் இது குணமளிக்காது. பிற கேடு தரும் மருந்துகளைச் சாப்பிட்டவர்களுக்கு 30 மி.லி. சாறு 20 நாள் காலையில் கொடுக்க குணமடைவர்.

இதன் சாறு 30 மி..லி. இந்துப்பு-15 கிராம், சீரகம் 5 கிராம் சேர்த்து நீரில் கலந்து 20 நாள் கொடுக்க பித்த நோய், வயிற்றுக்கோளாறு, பக்க சூதக வாதம், கப நோய் குணமாகும்.

இதன் சாற்றை வாயிலிட்டுச் சுவைக்க பித்த மயக்கம், குமட்டல், பித்த வாந்தி, சூடு குணமாகும். பற்பம் என்பது சுண்ணாம்பு சத்துடையதாம். எலும்பு, சுண்ணாம்பு இதன் சாற்றில் கரையும், சங்கு, பவளம், முத்து ஆகியன இச்சாற்றில் பற்பமாகும்.

இலையைப்புளித்த மோருடன் ஊறவைத்து பழைய சோற்றில் ஊற்றி உப்பிட்டு காலையில் உண்டுவர உடல் வெப்பம் குறையும். பித்த சூடு தீரும் தழும்புகள் குணமாகும். படை, கருமையாகத் தடிப்பாகப் படர்தல், இச்சாற்றில் நிலாவரை வேரை இழைத்துப் பூசவேண்டும். 5-6 நாள் பூச குணமாகும்.

வெறும் வயிற்றில் காலை 3-4 மண்டலம் இச்சாற்றைத் தேனுடன் அருந்த கற்பகுணம் உண்டு. மூப்பு நீங்கும், நரை, திரை படராது. ஆயுள் பெருகும். உடல் ஊட்டம் பெறும். ஆனால் புளி, காரம், புலால், புகை ஆகாது. எலுமிச்சம் பழச்சாறு அளவோடு மருந்தாகத்தான் பயன்படுத்த வேண்டும். நாளும் தவராது சாப்பிட்டால் உடல் எலும்புச் சத்தை இழந்து விடும். விந்து நீர்த்து விடும். தாது நட்டம் எற்படும்.

இப்பழச்சாற்றைத் தலைக்குத் தேய்த்து அரை மணி நேரம் சென்று குளிக்க வேண்டும். சீரகத்தை இச்சாற்றில் ஊறவைத்து உலர்த்தி, சூரணம் செய்து 5 கிராம் அளவு கொடுத்து வர 48 நாளில் பைத்தியம் குணமாகும். பிதற்றல் மயக்கம் தீரும்.

குடற்புண், காச்சல், டைப்பாய்டு சுரம் எனப்படும். இதற்கு எலுமிச்சம் பழச்சாற்றில் பாலைக் கலந்தால் அது திரிந்து நீர்த்து விடும். இதனை வடிகட்டிக் கொடுக்கலாம். பிற மருந்து, ஊசி போட்டாலும் இதனை துணை மருந்தாகக் கொடுக்கலாம்.

வீடானாலும், கோவில் என்றாலும் அங்கே எலுமிச்சையின் பயன்பாடு அதிகம் இருக்கும். இதற்கு காரணம் அந்த பழத்தில் உள்ள அதிசயிக்கத்தக்க மருத்துவ குணங்களே. வீட்டில் சமையலில் அதிகம் பயன்படுத்தப்படும் எலுமிச்சை உடல் நலத்தை பாதுகாக்கிறது. கோவில்களில் அம்மனுக்கு அணிவிக்கப்படும் எலுமிச்சப்பழ மாலையும், எலுமிச்சை விளக்கும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தொற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இதன் காரணமாகவே நம் முன்னோர்கள் எலுமிச்சம் பழத்தை அதிக அளவில் பயன்படுத்தி வந்துள்ளனர். எலுமிச்சை கனிகள் மருத்துவ குணம் கொண்டவை கனிகளின் சாற்றில் உள்ள சிட்ரிக் அமிலம் முக்கிய பொருளாகும். வைட்டமின் சி குறைவினால் வரும் ஸ்கர்வி நோய்க்கு எதிரானது.

செயல் திறன் மிக்க வேதிப்பொருட்கள் கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள், உள்ளன. அஸ்காரிக் அமிலம், அலனைன், நியாசின், வைட்டமின் சி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்க்மோட்டின், நாரிங்கின், சிட்ரால், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிங் அமிலம்

சர்வரோக நிவாரணி நம் உடலுக்கு தேவையான வைட்டமின் சி சத்து எலுமிச்சையில் அதிகம் காணப்படுகிறது. மேலும் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை பாதுகாக்கிறது.

எலுமிச்சம் பழத்தை ஒரு சர்வரோக நிவாரணி என்று சொல்லலாம். அந்தளவுக்கு நோய்கள் வராமல் தடுத்து உடல் நலத்தை காத்துக் கொள்ள என்னென்ன பொருட்கள் அவசியம் தேவையோ, அவைகள் அனைத்தும் இந்த பழத்தில் இருக்கின்றன.

நுரையீரல் நோய்களை தடுக்கும் எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில் கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்க டானிக் ஆகும். எலுமிச்சை சாறு தாகத்தினை தீர்த்து எரிச்சலைப் போக்கும். நோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்டது. நுரையீரல் நோய்களுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது.

உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும் எலுமிச்சம் பழத்தின் மூலம் பெற இயலும். ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்து வதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது. பசி தூண்டுவி. தசை இறுக்கி, சீரண ஊக்குவி, வயிற்று வலி தீர்க்கும். வாந்தி நிறுத்தும்.

சீரண மண்டலம் கல்லீரல் தொல்லைகளைப் போக்க வல்லது. கணையப் பெருக்கம் தொடர்பான நோய்களுக்கு எலுமிச்சை ஊறுகாய் பயன்படுகிறது. எலுமிச்சம் பழ ரசத்தை சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். எலுமிச்சை சாற்றின் பானம் நீரிழிவு நோயாளியின் தாகம் போக்கும். கொசுக்கடியினால் ஏற்படும் எரிச்சல் மற்றும் குடைச்சல் போக்க கடித்த இடத்தில் எலுமிச்சை சாறினைப் பூச வேண்டும். இரவில் தூங்குவதற்கு முன் சாறினைப் பூசினால் கொசுக்கடியில் இருந்து பாதுகாக்கும்.

வயிற்றுப் போக்கு எலுமிச்சம் பழத்துக்கு மலத்தை இறுக்கும் குணம் உண்டு. அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக வயிற்றுப் போக்கு நின்றுவிடும். தேன் சேர்த்து சாப்பிட்டால் மலக்கட்டு நீங்கி விடும். கடுமையான வேலை பளுவினால் ஏற்படும் களைப்பை போக்க எலுமிச்சை பழத்தினை கடித்து சாற்றை உறிஞ்சி குடித்தால் உடனே களைப்பை போக்கும்

நெஞ்சினில் கபம் கட்டி இருமலால் சிரமப்படுபவர்கள் ஒரு எலுமிச்சை பழச்சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து காலை, மாலையாக தொடர்ந்து 3 நாட்கள் சாப்பிட்டு வந்தால் கபம் வெளியாகி உடல் நன்கு தேறும்.

ஸ்கர்வி நோயை குணமாக்கும் குழந்தைகளுக்கு 35 மில்லிகிராமும், பெரியவர்களுக்கு 50 மில்லிகிராமும், பாலு}ட்டும் தாய்மார்களுக்கு 80 மில்லிகிராம் வைட்டமின் சி யும் தினம் தேவையாகும். வைட்டமின் சி ஆனது சிட்ரஸ் அமிலம் அடங்கிய அனைத்து பழங்களிலும் உள்ளது. தக்காளி, மிளகு, முட்டைகோஸ், கொய்யா, காலிஃபிளவர் போன்றவற்றில் இருக்கிறது. இத்தனை கனிகளில் வைட்டமின் சி இருந்தும் நம்மில் பலர் இதனை மாத்திரை வடிவத்தில்தான் சாப்பிட விரும்புகின்றனர். நகர்புற ஏழ்மையானவர்களிடம் வைட்டமின் சி பற்றாக்குறையால் ஸ்கர்வி எனும் நோய் பரவலாக இப்போதும் இருந்து வருகிறது. முடியில் நிறமாற்றம், முடிஉதிர்தல், தோலில் ரத்த கசிவு, கறுப்பு புள்ளிகள் தோன்றும். இதற்கு அதிக அளவில் வைட்டமின் சி யை தர எளிதில் குணமாக்கலாம்.

மனிதன் தனக்கு வேண்டிய தேவையான வைட்டமின் சி யை அவன் உணவின் மூலம்தான் பெறமுடியும். அதற்கு கை கொடுப்பது எலுமிச்சை பழச்சாறாகும். ஆதிகாலந்தோட்டு மனித பரிணாம வளர்ச்சிக்கு அஸ்கார்பிக் அமிலம் ஆதாரமாக இருந்து வந்திருக்கிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...