|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

27 August, 2011

வைரத்தால் ஆன 'கிரிஸ்டல் கிரகம்' கண்டுபிடிப்பு!

வைரத்தால் ஆன ஒரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மாபெரும் நட்சத்திரங்கள் தங்களது எரி சக்தி அனைத்தையும் இழந்து, சுருங்கும்போது பல்ஸார்கள் எனப்படும் ஒலியை வெளிப்படுத்தும் சிறிய நியூட்ரான் நட்சத்திரங்களாக மாறும். இந்த பல்ஸார்கள் பெரும்பாலும் தனித்தே காணப்படும்.

சில நேரங்களில் கிரகங்களுடன் கூடிய சில பல்ஸார்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந் நிலையில் ஆஸ்திரேலியாவின் நியூ செளத் வேல்ஸ் பகுதியில் உள்ள பார்க்ஸ் ரேடியோ டெலஸ்கோப் விண்வெளி ஆய்வு மையத்தை் சேர்ந்த விஞ்ஞானிகள், புதிய பல்ஸார் ஒன்றை கண்டுபிடித்தனர். இதற்கு PSR J1719-1438 என பெயரிடப்பட்டுள்ளது.

பூமியிலிருந்து 4,000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கும் இந்த பல்ஸார் நட்சத்திரத்தைச் ஒரு கிரகமும் சுற்றி வருகிறது.இது போன்ற கிரகங்கள் பெரும்பாலும் ஹைட்ரஜன் அல்லது ஹீலியத்தால் ஆனவையாக வெறும் வாயு கிரகங்களாக இருக்கும்.

ஆனால், இந்த கிரகம் கார்பன், ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதன் அழுத்தமும், நிறையும் நினைக்க முடியாத அளவுக்கு மிக மிக அதிகமாக உள்ளதால், அங்குள்ள கார்பன் இறுகி வைரம் அல்லது கிரிஸ்டல் போன்ற நிலையில் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

இதனால் அந்த கிரகமே, இதுவரை நாம் கற்பனை செய்து பார்த்திராக வகையில் வைரம் அல்லது கிரிஸ்டல்களாக ஜொலித்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது.
இந்த கிரகம் அந்த பல்ஸாரை சுற்றி வருவதோடு, ஒரு நிமிடத்துக்கு நூற்றுக்கும் அதிகமான முறை தன்னைத் தானே சுற்றிக் கொண்டும் உள்ளது. இது 60,000 கி.மீ. விட்டம் (diameter) கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...