|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

22 September, 2011

தைவான் நாட்டுக்கு போர் விமானங்களை சப்ளை செய்ய, அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதற்கு, சீனா கண்டனம்!

தைவான் நாட்டுக்கு போர் விமானங்களை சப்ளை செய்ய, அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளதற்கு, சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. தைவான் நாடு, தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என, சீனா கூறி வருகிறது. இருப்பினும் தைவான் நாட்டின் ஆட்சி நிர்வாகம் தன்னாட்சி பெற்றதாக உள்ளது. இதற்கிடையே, தைவானுக்கு, 5.85 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு, எப்.16 ரக விமானங்களையும், விமான உதிரி பாகங்களையும் சப்ளை செய்ய அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாது, அமெரிக்காவின் லூக் விமானப்படை தளத்தில் தைவான் நாட்டை சேர்ந்த பைலட்களுக்கு பயிற்சி அளிக்கவும் முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா கண்டித்துள்ளது. தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியான தைவானுக்கு ஆயுத சப்ளை செய்வது, சீன-அமெரிக்க பாதுகாப்பு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் என, சீனாவின் பாதுகாப்பு அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...