|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

13 September, 2011

தங்கத்தில் முதலீடா உஷார்!

கடந்த 2004ல், தங்கத்தை யூக வணிகத்தில் விற்க மத்திய அரசு அனுமதித்தது. இந்தியாவை பொறுத்தவரை, தங்கத்தின் விலை இன்று இறக்கை கட்டிப் பறப்பதற்கு அது தான் காரணம். யூக வணிகத்தில் மர்ஜின் ரேட்டாக (விளிம்பு விகிதம்) மிகக் குறைந்த அளவு பணத்தைக் கொடுத்துவிட்டு, அதிகளவு தங்கத்தை வாங்கி வைத்துக் கொள்ளலாம்.யூக வணிகத்தில் ஈடுபடுகிறவர்கள் அவர்கள் விருப்பத்திற்கு தங்கத்தை வாங்கி இருப்பில் வைத்துக் கொள்கின்றனர். யூக வணிகத்தில் தங்கம் வாங்குவதற்கான மார்ஜின் ரேட்டை அதிகரிக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.முன்பு, மக்கள் தங்கள் அப்போதைய தேவைக்கு மட்டும் தங்கம் வாங்கினர். இப்போது, அதை ஒரு முதலீடாக பார்க்கின்றனர்.தங்களிடம் உள்ள தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து, அதில் கிடைக்கும் பணத்தில் தங்கம் வாங்கும் பழக்கம் இப்போது அதிகரித்துவிட்டது.தங்கத்தை நகையாக வாங்குவதை விட, கட்டிகளாகவும், நாணயமாகவும் மக்கள் வாங்குகின்றனர். கறுப்புப் பணத்தை மாற்றுவதற்கும் இப்போது தங்கம் தான் பயன்படுகிறது.குறிப்பிட்ட அளவிற்கு மேல் தங்கம் வாங்குபவர்கள் தங்கள் பான் கார்டைக் காட்ட வேண்டும் என்று சட்டம் கொண்டு வந்தால், அதிகமாக தங்கம் வாங்குகிறவர்கள் அரசின் கண்காணிப்பின் கீழ் வந்துவிடுவர். அதன் மூலம், விலை குறைய வாய்ப்பிருக்கிறது.இது ஒரு புறம் இருக்க, தற்சமயம் ஆபரணத் தங்கத்தின் விற்பனை, 17 சதவீதம் குறைந்தும் விலை மட்டும் கூடிக்கொண்டே போகிறதெனில், நீர்க்குமிழி உடைவது போல், தங்கம் விலையில் திடீர் சரிவிற்கும் வாய்ப்பிருப்பதை உணர்ந்து, நாம் உஷாராக இருக்க வேண்டும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...