|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

11 October, 2011

அவமானப்படுத்திய பட அதிபர்கள் தங்கர்பச்சான் உருக்கம்!

செவன்த்சேனல் மாணிக்கம் நாராயணன் தயாரிப்பில், பார்த்திபன் கதாநாயகனாக நடித்து டைரக்டு செய்த படம், வித்தகன்'. இந்த படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை சத்யம் தியேட்டரில் 10.10.2011 அன்று காலை நடந்தது. பாடல்களை, இசையமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ் வெளியிட்டார். 


இந்த விழாவில், டைரக்டர் தங்கர்பச்சான் கலந்துகொண்டு பேசியதாவது: 
இதுவும் கூட பரவாயில்லை. இன்று கூட மிகப்பெரும் தயாரிப்பாளராக இருக்கக்கூடிய மற்றொருவருக்கு முதல் ஆளாக  அழகி' படத்தை திரையிட்டு காண்பித்தேன். அவர் என்னிடம் எந்த கருத்தும் சொல்லாமல், தயாரிப்பாளரை அழைத்தார்.   தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள். செலவு செய்த பணம் இதோடு போகட்டும். இந்த படத்தை ரிலீஸ் செய்தால், மேலும் ரூ.50 லட்சம் தேவைப்படும். உங்களுக்கு போஸ்டர் காசு கூட திரும்பி வராது. இதை இப்படியே விட்டுவிட்டு ஊருக்கு ஓடிவிடுங்கள்'' என்று கூறிவிட்டு சென்றார்.
தயாரிப்பாளராகவும், மிகப்பெரிய இயக்குனராகவும் இருக்கக்கூடிய ஒருவர் படம் பார்த்துவிட்டு, ஒரு வார்த்தை கூட பேச விரும்பாமல், முகத்தை திருப்பிக் கொண்டு போய்விட்டார். 

நான் இயக்கிய அழகி' படம், ஒரு கோடியே எழுபது லட்சம் செலவில் தயாரிக்கப்பட்டது. தயாரிப்பாளர் பாதி விலைக்கு விற்க முன்வந்து, அந்த படத்தை 120 முறை திரையிட்டு காண்பித்தும் யாரும் வாங்க முன்வரவில்லை. அது கூட பரவாயில்லை. அவர்கள் மகிழ்ச்சியாக இருந்துவிட்டு போகட்டும். என்னை அவர்கள் அவமானப்படுத்தியது போல், அவர்களின் பெயர்களை சொல்லி நானும் அவமானப்படுத்த விரும்பவில்லை. 


இப்படிப்பட்டவர்கள் எல்லாம் இந்த துறையில் இருக்கிறார்கள். ஆனால் என்னை அவமானப்படுத்தியவர்களின் கணிப்பை எல்லாம் மீறி,  அழகி' படம் எவ்வளவு பெரிய வெற்றியையும், வரவேற்பையும் பெற்றது என்று உங்களுக்கே தெரியும். 
தோல்வியை அனுபவித்தவனுக்குத்தான் வெற்றிகளை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது புரியும். வித்தகன் திரைப்படமும் மாபெரும் வெற்றியை பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.'' இவ்வாறு தங்கர்பச்சான்

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...