|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

06 October, 2011

அரையிறுதிக்கு பெங்களூரு அணி!


சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதிக்கு பெங்களூரு அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த கடைசி லீக் போட்டியில், இமாலய இலக்கை துரத்திய பெங்களூரு அணிக்கு, கடைசி பந்தில் சிக்சர் அடித்து, வெற்றி பெறச் செய்தார் அருண் கார்த்திக். தோல்வியடைந்த தெற்கு ஆஸ்திரேலிய அணி தொடரில் இருந்து வெளியேறியது. மூன்றாவது சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 தொடரின் கடைசி லீக் போட்டி, நேற்று பெங்களூருவில் நடந்தது. இதில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், தெற்கு ஆஸ்திரேலிய அணிகள் மோதின. "டாஸ் வென்ற கிளிங்கர் பேட்டிங் தேர்வு செய்தார்.



நல்ல துவக்கம்: தெற்கு ஆஸ்திரேலிய அணிக்கு ஹாரிஸ், கிளிங்கர் ஜோடி இணைந்து "சூப்பர் துவக்கம் கொடுத்தது. அரவிந்த், நான்ஸ் ஓவர்களில் ஹாரிஸ், தலா மூன்று பவுண்டரி விளாசி ஸ்கோர் "ஜெட் வேகத்தில் உயர்ந்தது. அரவிந்த்தின் அடுத்த ஓவரை, ஹாரிஸ் (தொடர்ந்து 4 பவுண்டரி) மீண்டும் பதம் பார்க்க, ஸ்கோர் 4.3 ஓவரில் 50ஐ தாண்டியது. கிளிங்கர் (7) ஏமாற்றினார்.



பெர்குசன் அதிரடி:ஹாரிசுடன் சேர்ந்த பெர்குசனும் அதிரடியில் மிரட்டினார். அரவிந்த் ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த இவர், நான்ஸ், பட்கல் பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 74 பந்துகளில் 114 ரன்கள் சேர்த்த நிலையில், பெர்குசன் (70) அவுட்டானார்.



ஹாரிஸ் சதம்: மறுமுனையில் தொடர்ந்து அசத்திய ஹாரிஸ், சர்வதேச "டுவென்டி-20 அரங்கில் முதல் சதத்தை எட்டினார். அரவிந்த் வீசிய 20 வது ஓவரில் மட்டும், 5 பவுண்டரி அடிக்கப்பட, 20 ஓவரில் தெற்கு ஆஸ்திரேலிய அணி 214 ரன்கள் குவித்தது. ஹாரிஸ் (61 பந்து, 108 ரன்கள்), கிறிஸ்டியன் (27) அவுட்டாகாமல் இருந்தனர்.



கெய்ல் ஏமாற்றம்: இந்த போட்டியில் வென்றால் தான் அரையிறுதிக்கு செல்ல முடியும் என்ற நிலையில், இமாலய இலக்கை விரட்டியது பெங்களூரு அணி. கெய்ல், தில்ஷன் ஜோடி துவக்கத்தில் இருந்தே அதிரடியில் அசத்த, 4.4 ஓவரில் ஸ்கோர் 50 ஐ எட்டியது. மூன்று சிக்சர் அடித்த திருப்தியுடன் கெய்ல் (26) திரும்பினார். 



கோஹ்லி மிரட்டல்: பின் தில்ஷனுடன் விராத் கோஹ்லி இணைந்தார். கிறிஸ்டியன், ஓ பிரையன், ரிச்சர்ட்சன் பந்துகளை சிக்சருக்கு அனுப்பி, அதிரடியாக ரன்கள் சேர்த்தார் கோஹ்லி. இதனால் 10.2 ஓவரில் அணியின் ஸ்கோர் 100ஐ தாண்டியது. ஹாரிசின் பந்தில் சிக்சர் அடித்த விராத் கோஹ்லி, அரைசதம் கடந்தார்.



தில்ஷன் விளாசல்: தன்பங்கிற்கு விளாசலைத் தொடர்ந்த தில்ஷன், அரைசதம் அடித்தார். இந்த ஜோடி ஹாரிசின் ஓவரில் 2 சிக்சர், 3 பவுண்டரி உட்பட, 25 ரன்கள் எடுத்தது. இரண்டாவது விக்கெட்டுக்கு 53 பந்தில் 100 ரன்கள் சேர்த்த நிலையில், விராத் கோஹ்லி (36 பந்து, 70 ரன்கள், 6 சிக்சர், 4 பவுண்டரி) அவுட்டாக, பெங்களூரு அணிக்கு சிக்கல் ஏற்பட்டது. சவுரப் திவாரி (9), அகர்வால் (6) நீடிக்கவில்லை. 12 பந்தில் வெற்றிக்கு 18 ரன்கள் தேவை என்ற நிலையில், டெய்ட்டின் ஓவரில் தில்ஷன் (74), வெட்டோரி (8), பட்கல் (1) வரிசையாக வெளியேற, கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டது.



அருண் "சிக்சர்: கிறிஸ்டியன் வீசிய இந்த ஓவரின் முதல் பந்தில், ஒரு ரன் எடுக்க, அடுத்த பந்தில் சையது (2) ரன் அவுட்டானார். 3வது பந்தில் பவுண்டரி அடித்தார் அரவிந்த். கடைசி 3 பந்தில் 9 ரன் தேவைப்பட்டது. 4, 5வது பந்தில் 3 ரன்கள் எடுத்தனர். கடைசி பந்தில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 6 ரன் தேவைப்பட்டது. பந்தை எதிர்கொண்ட அருண் கார்த்திக், எவ்வித பதட்டமும் இல்லாமல், அதை சிக்சருக்கு அனுப்ப, பெங்களூரு அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 215 ரன்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் "திரில் வெற்றி பெற்றது. தவிர, சாம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக இலக்கை "சேஸ் செய்து அசத்திய அணி என்ற பெருமையையும் பெங்களூரு தட்டிச் சென்றது.

அரையிறுதியில் மோதுவது யார்
சாம்பியன்ஸ் லீக் "டுவென்டி-20 தொடரில், நாளை முதல் அரையிறுதி போட்டிகள் துவங்குகின்றன. இதன் விவரம்: தேதி    போட்டி    அணிகள்    இடம்    நேரம்
1. அக்., 7, முதல் அரையிறுதி  பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ்-நியூ சவுத்வேல்ஸ்    பெங்களூரு    இரவு 8 மணி
2. அக்., 8 இரண்டாவது அரையிறுதி    மும்பை  இந்தியன்ஸ்-சாமர்சட்   சென்னை    இரவு 8 மணி

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...