|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

12 October, 2011

காமா கதிர்களால் பூமிக்கு ஆபத்து!


விண்வெளியில் உள்ள நட்சத்திரங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொள்வதால் வெளியாகும் காமா கதிர்வீச்சால், பூமிக்கு பேராபத்து ஏற்படலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து வாஸ்பார்ன் பல்கலைகழகத்தை சேர்ந்த விண்வெளி ஆராய்ச்சியாளர் பிரென் தாமஸ் கூறியதாவது, விண்வெளியில் ஏராளமான நட்சத்திரங்கள் உலா வருகின்றன. இவை அவ்வப்போது, ஒன்றோடு ஒன்று மோதி கொள்கின்றன. இதனால் விண்வெளியில் பலவித கதிர்வீச்சுகள் வெளியாகின்றன. இதில் டன் கணக்கில் காமா கதிர்களும் வெளியாகின்றன.

இந்த காமா கதிர்கள் பூமியின் மேற்பரப்பில் உள்ள பாதுகாப்பு படலமான ஓசோன் படலத்தை அதிகளவில் பாதிக்கிறது. ஒரு நொடி நேரத்தில் வெளியாகும் காமா கதிர்களால் ஓசோன் படலத்தில் 2 துளைகள் விழுவதாக, விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளனர்.

நீண்ட காமா கதிர்களை விட, சிறிய காமா கதிர்களின் தாக்கம் தான் அதிக சேதத்தை உண்டாக்குகிறது. காமா கதிர்களின் நேரத்தை விட, கதிர்வீ்ச்சின் அளவு தான் முக்கியமாக கருதப்படுகிறது.

நட்சத்திரங்களின் மோதல் மூலம் முதலில் பூமியின் மேல் பகுதியில் உள்ள ஓசோன் படலம் முழுமையாக அழிந்துவிடும். மேலும், ஆக்சிஜன் மற்றும் நைட்ரஜன் அணுக்கள் நிலைத் தன்மை இழந்து ஒன்றோடு ஒன்று இணைந்து, நைட்ரஸ் ஆக்சைடாக மாறும். பின்னர் மீதமுள்ள ஓசோன் படலத்தை முழுமையாக அழித்து, மழையோடு கரைந்துவிட செய்துவிடும்.

ஓசோன் படலம் அழிந்தால், பூமியில் உள்ள கடல்வாழ் உயிரிகள், தாவரங்கள் மற்றும் மனித குலத்துக்கும் பேராபத்து ஏற்படும், என்றார். இதற்கு முன் நட்சத்திர மோதல்கள் எப்போதாவது நடந்துள்ளதா என்பதை கண்டறியும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...