|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

24 October, 2011

உள்ளத்திற்கு புத்துணர்ச்சி தரும் 'ஸ்பா '


ஸ்பா எனப்படும் சொல்லானது தற்பொழுது இந்தியாவின் அனைத்து பெரு நகரங்களிலும் பிரபலமடைந்து வருகிறது. நீர் சிகிச்சையுடன் தொடர்புடைய ஸ்பா வெப்ப நீரூற்றுகள், ரிசார்ட்கள் உள்ளிட்டவை பொதுவாக குளிப்பதற்கும், குடிப்பதற்கும் வெப்ப அல்லது கனிம நீரை வழங்குகின்றன. அவை நோய் நீக்கும் உடல் நலச் சிகிச்சைகளையும் வழங்குகின்றது. உலக அளவில் பிரபலமடைந்து வரும் இந்த நீர் சிகிச்சை ஐரோப்பா மற்றும் ஜப்பான் நாட்டில் பரவலாக பரவியுள்ளன. இது மேல்தர வர்க்கத்தினர் மேற்கொள்ளும் உயர்தரமான கொஞ்சம் காஸ்ட்லியான சிகிச்சையாகும்.

ஸ்பா சிகிச்சை அல்லது நீர் சிகிச்சை என்பது உடல் மற்றும் மன நலத்திற்கு உதவும் மருத்துவமற்ற சிகிச்சை முறையாகும். இது பெரும்பாலும் ரிசார்ட்ஸ், அழகுநிலையங்கள், போன்ற இடங்களில் செயல்படுகின்றன. பெல்ஜியத்தின் ஸ்பா என்ற நகரின் பெயரில் இருந்து இந்த சொல் வந்துள்ளது. “நீர் மூலம் உடல் நலம்” என்னும் பொருள்படும் “சனிடாஸ் பெர் அக்யூயம்” என்ற லத்தின் வாக்கியத்தின் சுருக்கப்பெயர்தான் ஸ்பா ஆகும். 

ஸ்பா வகைகள்: முகத்தை அழகு படுத்துதல், மசாஜ், சூடான மெழுகினைக் கொண்டு உடலில் பூசி பின் அவை குளிர்ந்த பின் அகற்றுதல், சேற்றுக்குளியல், மூலிகைக் குளியல் போன்ற சிறப்பு வாய்ந்தவைகள் ஸ்பா சிகிச்சையில் நடைமுறையின் உள்ளன. இது தவிர வெப்ப நீரூற்று, மித வெப்ப மருந்து நீர்மக்குளியல், வெப்பத்தொட்டி, சோனா, நீராவிக்குளியல் போன்றவையும் ஸ்பா சிகிக்சையின் சிறப்பம்சமாகும். இதனுடன் ஊட்டச்சத்து மற்றும் தியானம் தொடர்பாகவும் ஆலோசனை தரப்படுகிறது.ஸ்பா சிகிச்சையின் நன்மைகள்: இது உடலுக்கும் உள்ளத்திற்கும் புத்துணர்ச்சியளிப்பதோடு மன அழுத்தத்தை நீக்குகிறது. பணிச்சுமை, குடும்பசுமையினால் ஏற்படும் அழுத்தங்களை இது போக்குகிறது. ரத்த சுழற்சியை அதிகரிக்கிறது. ரத்தத்திற்கு அதிக அளவு ஆக்ஸிசனை அளிப்பதோடு செல்களை புதுப்பிக்கின்றது. வெது வெதுப்பான நீராவி சிகிச்சையானது ரத்த சுழற்சியை சீராக்குகிறது. நீர் சிகிச்சையானது உடலை மட்டுமில்லாது ஆத்மா வரை சென்று ஊடுருவுகிறது. உடல் இழந்த தண்ணீரை சமப்படுத்துகிறது.இதய சுமை குறையும்: விளையாட்டு வீரர்கள் தங்களின் உடலுக்குத் தேவையான புத்துணர்ச்சியைப் பெற ஸ்பா சிகிச்சை உதவுகிறது. தசைகளின் இறுக்கத்தை மசாஜ் குறைத்து, தசை வலிகளை நீக்குகிறது. கடுமையான உழைப்பு தசைகளில் கொஞ்சம் கொஞ்சமாக லாக்டிக் அமிலத்தைச் சேர வைக்கிறது. தசைகளிலிருந்து அந்த லாக்டிக் அமிலத்தை மசாஜ் நீக்குகிறது. அதன் மூலம் ஒரு புத்துணர்வையும் சக்தியையும் அளிக்கிறது.முறையான மசாஜ் இருதய சுமையைக் குறைக்கும்.புத்துணர்ச்சி அதிகரிக்கும்: ஸ்பா மசாஜ் மூலம் தோல் புத்துணர்ச்சி பெறுவதோடு பளபளப்படைகிறது. மசாஜ் செய்யப்படும் பகுதிகளில் ரத்த ஓட்டம் வேகம் பெறுகிறது. இதன் மூலம் அதிக சத்துக்கள் எடுத்துச் செல்லப்படுகிறது. நோய்களை குணமாக்கும் சக்தியும் அதிகரிக்கிறது. ஆக்சிஜனை எடுத்துச் செல்லும் ரத்தத்தின் திறன் அதிகரித்து அதன் பயன் கூடுகிறது. மசாஜ் மூலம் தோலிலுள்ள நுண்துளைகள் திறக்கப்பட்டு வியர்வை மூலம் கழிவுகள் உடலிலிருந்து வெளியேற்றப்படுகின்றன.கழிவுகள் வெளியேறும்:  மென்மையான மசாஜ் நரம்புகளின் இறுக்கத்தைக் குறைத்து அவற்றுக்கு இதமளிக்கும். சற்று கடுமையான மசாஜ் தளர்ந்த நரம்புகளைத் தூண்டி அவற்றின் திறனை அதிகரிக்கும். கீழ்வயிற்றுப் பகுதியில் மசாஜ் செய்வதால் ஜீரண மண்டலம் தூண்டப்பட்டு கழிவுகள் நன்கு வெளியேறும். கல்லீரலின் ஆற்றல் அதிகரிக்கும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...