|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

18 October, 2011

இந்தியப் பணவீக்கத்தை உயர்த்தும் சீனா!


இந்தியாவுக்கான ஏற்றுமதிப் பொருள்களின் விலையை சீனா அதிகரித்துவிட்டதுதான் இந்தியாவில் பணவீக்கம் தொடர்ந்து உயரக் காரணம் என பொருளாதார கொள்கை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. இந்திய உற்பத்தி துறைக்கு தேவையான பொருட்களில் 25 சதவீதம் சீனாவிலிருந்தே இறக்குமதியாகிறது. மேலும் இந்தியாவில் விற்பனையாகும் 3ல் ஒரு பொருள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதுதான். 

இதை நன்கு உணர்ந்துள்ள சீனா, கடந்த ஆண்டு முதல் இந்தியாவுக்கான தனது ஏற்றுமதிகளின் விலையை 10 சதவீதம் வரை உயர்த்தி வந்துள்ளது. இறக்குமதி விலை அதிகரிப்பால் உள்நாட்டு தயாரிப்பிலும், நேரடி விற்பனையிலும் சீன பொருட்கள் விலையை உற்பத்தியாளர்கள் உயர்த்துகின்றனர். 

உணவு பணவீக்கம் அல்லாத மற்ற பொருட்கள் அடிப்படையிலான பணவீக்க உயர்வுக்கு சீனாவும் முக்கிய காரணமாக உள்ளது. அத்துடன், கடந்த 6 மாதங்களில் இந்திய ரூபாய்க்கு இணையாக சீன கரன்சி மதிப்பு 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக, இறக்குமதி செலவு அதிகரிப்பு, தொழிலாளர் கூலி உயர்வு ஆகியவற்றால் இந்தியாவில் பொருட்கள் விலை உயர்ந்து பணவீக்க அதிகரிப்புக்கு காரணமாவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...