|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

20 November, 2011

தவறிய உறவில் பிறந்த குழந்தை குளத்தில் வீசிக் கொலை (கலிகாலம்)

நெல்லை மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ஆண்டான்குளத்தில் கடந்த 18.11.2011 அன்று பச்சிளங்குழந்தையின் உடல் மிதந்தது. தகவலறிந்த சிவகிரி இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திற்குச்சென்று குழந்தையின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். போலீசாரின் விசாரணையில் வாசுதேவநல்லூர் அருகில் உள்ள டி.ராமநாதபுரம் மாடசாமி கோவில் தெருவைச் சார்ந்த ஆறுமுக ராஜா அவரது மனைவி பரமேஸ்வரி மகள் ஆனந்தி ஆகியோர் குழந்தையைக் குளத்தில் வீசிக் கொலை செய்தது தெரிய வந்தது.

தவறான உறவின் காரணமாகப் பிறந்ததால் கொன்று விட்டோம் என விசாரணையில் அவர்கள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனார்கள் போலீசார். 
ஆறுமுகராஜா தம்பதியரின் இளையமகள் ஆனந்தி. வீட்டிலிருந்தபடியே பீடி சுற்றுபவர். கூலித்தொழிலாளிகளான ஆறுமுகராஜாவும் பரமேஸ்வரியும் காலையில் வேலைக்குச் சென்றால் இரவு சாயும் போது தான் வீடு திரும்புவார்கள். எனவே தனிமையில் பீடி சற்றிக் கொண்டிருந்த ஆனந்தியின் மனம் அலைபாய்ந்தது. அவளது தனிமைச் சூழலைப் பயன் படுத்திக் கொண்ட பக்கத்து விட்டு நபர் ஒருவர் ஆனந்தியோடு பழக்கத்தை ஏற்படுத்தினார். சூழ்நிலையோ தனிமை. பருவத்தின் எல்லைக் கோட்டில், ஆனந்தியும் வாலிபரும். 
 ஒன்றாக கலந்து விட்டனர். விளைவு ஆனந்தியின் வயிற்றில் கரு உருவானது. பெண்ணின் கர்ப்பத்தையும், பழுத்த வெள்ளரிக் காயையும் பூண் போட்டு எத்தனை நாள்தான் மறைக்க முடியும். தன் உடலில் கரு வளர்வது வெளியே தெரியாமலிருக்க நைட்டி அணிந்து மறைத்தாள் ஆனந்தி. நிறைமாதத்தில் அவளது வேஷம் கலைய விபரம் தெரிந்த பெற்றோர்கள் மானம் போகுமே என தலையிலடித்துக் கொண்டார்கள். கடந்த 17ந் தேதி சிவகிரி தனியார் மருந்துவ மனையில் ஆனந்திக்கு பெண் குழந்தை பிறந்தது.

உடனடியாகக குழந்தையோடு ஆனந்தியையும் அழைத்துக் கெண்டு ஆறுமுகராஜாவும் பரமேஸ்வரியும் தளவாய்புரம் வழியாக ஆட்டோவில் ஊருக்குத் திரும்பினர்.
வழியில் தளவாய்புரம் அருகிலுளள்ள ஆண்டார்குளத்து கரையில் ஆட்டோவை நிறுத்தும்படி கூறினர். பிறகு பிறந்து 3 மணி நேரமான பிஞ்சு குழந்தையை மனிதாபிமானமில்லாமல் குளத்தில் வீசி விட்டு ஊருக்குச் சென்று விட்டனர். அடுத்த நாள் குழந்தையின் உடல் மிதந்தது. ஒட்டு மொத்த நெறிதவறிய உறவை வெளிப்படுத்தி விட்டது. பிறந்த அந்தப் பச்சைமண் செய்த பாவம் தான் என்ன? வீசி எறிவதற்கு அந்த உயிர் என்ன டீ குடிக்கும் பேப்பர் கப்பா என்று பதை பதைப்பில் புலம்புகிறார்கள் கிராமத்து மக்கள்.  கருணை இல்லாத மூவரின் கரங்களில் காப்பு மாட்டியது காவல்துறை

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...