|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

26 December, 2011

க்ரைம் படத்துக்காக நிர்வாணமாய் நடிகை பூஜாகாந்தி.


கிரைம் படத்துக்காக நடிகை பூஜா காந்தி நடித்த நிர்வாண காட்சி படமாகியுள்ளது. நிர்வாண காட்சியில் பூஜா பயமில்லாமல் நடித்தார் என்று இயக்குனர் கூறியுள்ளார். தமிழில் கரணுடன் கொக்கி, அர்ஜூனுடன் திருவண்ணாமலை ஆகிய படங்களில் நடித்திருப்பவர் பூஜா காந்தி. ஏராளமான கன்னட படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஸ்ரீனிவாஸ் ராஜு இயக்கும் தண்டுபால்யா என்ற கன்னட படத்தில் நடித்து வருகிறார். இப்படத்துக்காக பூஜா காந்தி நிர்வாணமாக நடித்த காட்சி சமீபத்தில் படமாகியுள்ளது. 

இதுபற்றி இயக்குனர்,   ‘’காதல் படங்களை இயக்கி வந்த நான் வித்தியாசமான கிரைம் கதை இயக்க முடிவு செய்தேன். இதற்காக தொடர் கொலைகள் செய்துவந்த ஒரு ரவுடி கூட்டத்தின் உண்மை கதையை தேர்வு செய்தேன். 11 பேர் கொண்ட இந்த கூட்டத்தில் லட்சுமி என்ற பெண்ணும் இடம்பெற்றிருந்தார். இவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது லட்சுமியை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.

இதை படமாக்க முடிவு செய்தேன். இதற்கான தகவல்களை சேகரிக்க பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்த ரவுடி கும்பலை சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தேன். பின்னர் இக்கதையை பூஜா காந்தியிடம் கூறினேன். நிர்வாண காட்சியில் நடிக்க வேண்டும், பீடி புகைக்கும் காட்சியில் நடிக்க வேண்டும் என்றேன். யோசித்து சொல்ல அவகாசம் தரும்படி கேட்டார். 3 வாரங்களுக்கு பிறகு சம்மதித்தார். அவர் நடித்த நிர்வாண காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இக்காட்சி படமாக்கப்பட்டபோது பட யூனிட் ஆட்கள் தவிர வேறு யாரும் ஷூட்டிங் அரங்குக்குள் அனுமதிக்கப்படவில்லை. பயமின்றி இக்காட்சியில் பூஜா நடித்தார்’’என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...