|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

09 January, 2012

கல்வித்துறையில் இருக்கும் ஓட்டைகளை அடைக்க வேண்டிய தருணம் இது டோரன்டோ கல்வியாளர் அனிதா சிங்!

கல்வித்துறையில் இருக்கும் ஓட்டைகளை அடைக்க வேண்டிய தருணம் இது என்று ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் வெளிநாடு வாழ் இந்தியர்களின் தின விழாவில் டோரன்டோ கல்வியாளர் அனிதா சிங் கூறினார். ஜெய்ப்பூரில் 7ம் தேதி துவங்கி 9ம் தேதி வரை நடைபெறும் இவ்விழாவில் பேசிய அவர், இந்தியாவில் பாலின அடிப்படையில் கல்வியை அளித்தால், 50 சதவீத மனித சக்தி, முழுமையாக பயனடையும். பெண் கல்வியையும் ஊக்குவிப்பதாக அமையும் என்று அவர் தெரிவித்தார். அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த அனிதா சிங், கணிதத்தை மாணவரும், மாணவியும் வெவ்வேறு வகைகளில் புரிந்து கொள்வார்கள். எனவே, அவரவர்க்கு ஏற்ற வகையில் கல்வியை கற்பித்தால் நிச்சயம் நல்ல பலனை அடையலாம். இந்தியாவில் பழமைவாதம், மூடநம்பிக்கை, கலாச்சாரம் போன்றவை நிறைந்துள்ளது. இவையே வளர்ந்த நாடுகளுக்கும் பொருளாதார அளவில் வரும் நாடான இந்தியாவிற்கும் இடையே உள்ள வித்தியாசமாகும். வரும் 10 ஆண்டுகளில் இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரிகள் துவக்கப்பட வேண்டும். கற்பித்தல் முறைகளில் நவீன தொழில்நுட்பங்களை புகுத்த வேண்டும், ஒரே முறையில் அல்லாமல் பல்வேறு முறைகளில் மாணவர்களுக்கு கற்பித்தல் என்பது கிடைக்க வேண்டும் என்று கூறினார். 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...