|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

07 February, 2012

இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ்...


குறைந்த கால மற்றும் நீண்ட கால அடிப்படையில் வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்துள்ளது. எனவே, அங்கு தங்கியிருக்கும்போது, கார் ஓட்டும் அவசியம் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. அத்தகைய சூழலில் அந்த நாட்டின் டிரைவிங் லைசென்ஸ் இருந்தால் மட்டுமே காரை வாடகைக்கு எடுத்து ஓட்டவோ அல்லது சொந்தமாக கார் வாங்கி ஓட்டவோ முடியும்.

எனவே, வெளிநாடு செல்பவர்கள் எந்த நாட்டிற்கு செல்கின்றனரோ அந்த நாட்டின் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது அவசியமாகிறது. திக்கு தெரியாத அயல்நாட்டில் போய் இறங்கியவுடன் டிரைவிங் லைசென்ஸ் பெறுவது எளிதான காரியமல்ல. அங்குள்ள டிரைவிங் ஸ்கூல்கள் மூலம் எளிதாக பெற்றுவிடலாமே என்றாலும், கூடுதல் கட்டணத்தை கொடுத்து தண்டம் அழும் சூழ்நிலை ஏற்படலாம்.இதை தவிர்க்க நம் நாட்டிலேயே இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெற்றுச்சென்றால் பாதிப் பிரச்னையை குறையும். எனவே, நம் நாட்டிலேய இன்டர்நேஷனல் லைசென்ஸ் பெறுவதற்கான வழிமுறைகளை இங்கே காணலாம்.

இன்டர்நேஷனல் டிரைவிங் லைசென்ஸ் பெறுவதற்கு நிரந்தர டிரைவிங் லைசென்ஸ் வைத்திருத்தல் அவசியம். இன்டர்நேஷனல் லைசென்ஸ் பெறுவதற்கு 4 ஏ என்ற விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அதனுடன் நிரந்தர டிரைவிங் லைசென்ஸ், பாஸ்போர்ட், எந்த நாட்டிற்கு செல்கிறோமோ அந்த நாட்டுக்கான விசா பிரதி, மருத்துவ சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து ரூ.1000 கட்டணமாக செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஆவணங்கள் சரிபார்த்த பின் அன்றைய தினமே இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் வழங்கப்படும். இந்தியாவுக்கும் மற்ற உலக நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, இங்கிருந்து வாங்கிச்செல்லப்படும் இன்டர்நேஷனல் டிரைவிங் பர்மிட் ஓராண்டுக்கு செல்லத்தக்கதாக இருக்கும். அதன்பிறகும் அங்கு தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும்போது அங்கேயே டிரைவிங் லைசென்ஸ் விண்ணப்பித்து பெற முடியும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...