|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

14 February, 2012

காரில் பிரேக் பிடிக்காமல் போனால்...?

கார்கள் தற்போது அதிநவீன தொழில்நுட்பங்கள் கொண்ட பிரேக்குகளுடன் வருகின்றன. மேலும், பிரேக் உள்ளிட்டவை சரியாக இயங்குகிறதா என்பது குறித்து எச்சரி்க்கை செய்யும் வசதிகளும் கார்களில் இருக்கிறது. ஆனாலும், டாப் வேரியண்ட் கார்களில் மட்டும் இந்த நவீன பிரேக் சிஸ்டம் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், கார்களில் சில சமயம் தொழில்நுட்ப கோளாறுகளால் பிரேக் பிடிக்காமல் போவதற்கு வாய்ப்பு இருக்கிறது.எவ்வளவு திறமை வாய்ந்த டிரைவராக இருந்தாலும் திடீரென பிரேக் பிடிக்காமல் போனால் காரை கன்ட்ரோல் செய்வது மிக கடினமான விஷயமாக இருக்கும். அது போன்ற அவசர சமயத்தில் மிகவும் சமயோஜிதமாக செயல்பட்டால், நிச்சயம் அசம்பாவிதங்களிலிருந்து பாதுகாத்து கொள்ள முடியும்.

காரில் செல்லும்போது பிரேக் பிடிக்கவில்லை என்று உணர்ந்தவுடன், முதலில் செய்ய வேண்டியது பதட்டத்தை விரட்டுவதுதான். உடனடியாக ஹெட்லைட்டை ஒளிர விட்டு எதிரே வாகனங்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டும். கியரை படிப்படியாக குறைத்து முதல் கியருக்கு கொண்டு வந்துவிடுங்கள். பின்னர் காரை மெதுவாக சாலையின் இடது புறத்திலேயே செலுத்துவதுடன் முதல் கியருக்கு வந்தவுடன் ஹேண்ட் பிரேக்கை மெதுவாக தூக்கி காரை மெதுவாக நிறுத்த முயற்சியுங்கள். பதட்டத்தில் கார் வேகமாக செல்லும்போது ஹேண்ட் பிரேக்கை பிடித்துவிட வேண்டாம்.அவ்வாறு செய்தால், ஹேண்ட் பிரேக்கின் கேபிள் அறுந்துவிட வாய்ப்புண்டு. மேலும், காரை நிறுத்துவதற்கு ஒரே ஆயுதமாக இருக்கும் ஹேண்ட் பிரேக்கும் இல்லையென்றால், சூழ்நிலை மோசமானதாகிவிடும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...