|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

19 March, 2012

ஒசாகா திரைப்பட விழாவில் தெய்வத்திருமகள் படத்திற்கு 2 விருது!

ஆசிய திரைப்பட விழாக்களில் ஒன்றான ஜப்பானின் ஒசாகா திரைப்பட விழாவில் விக்ரம் நடித்த தெய்வத்திருமகள் படத்திற்கு 2 விருதுகள் கிடைத்திருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த ஆண்டு விக்ரம், அனுஷ்கா,  சந்தானம், பேபி சாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி அனைவரின் பாராட்டை பெற்ற படம் தெய்வத்திருமகள். இப்படம் ஜப்பானின் ஒசாகா திரைப்பட விழாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது. மார்ச் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை நடந்த இவ்விழாவில் டைரக்டர் விஜய்யும், விக்ரமும் பங்கேற்றனர். "காட்ஸ் ஓன் சைல்டு" எனும் பெயரில் ஆங்கில ‌சப் டைட்டிலுடன் தெய்வத்திருமகள் படம் திரையிடப்பட்டது. விழாவில் தெய்வத்திருமகள் படத்திற்கு சிறந்த படத்திற்கான கிராண்ட் பிரிக்ஸ் அவார்டு மற்றும் சிறந்த பொழுதுபோக்குக்கான ஏ.பி.சி., அவார்டும் கிடைத்திருக்கிறது.   மனவளர்ச்சி குன்றிய அப்பாவுக்கும், 5வயது குழந்தைக்கும் இடையேயான பாசப் போராட்டத்தை அற்புதமாக வெளிப்படுத்திய படம் தெய்வத்திருமகள். இப்படம் ஆங்கிலத்தில் வெளிவந்த ஒரு படத்தின் தழுவல் தான் என்றாலும், அதை தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு அருமையாக இயக்கி இருந்தார் டைரக்டர் விஜய். டைரக்டரின் படைப்பை விட படத்தில் விக்ரம் மற்றும் குழந்தை சாராவின் நடிப்பு தான் அனைவரையும் கவர்ந்தது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...