|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

17 March, 2012

கச்சத்தீவில் இலங்கை அரசு நிரந்தர கடற்படை தளம்!


தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவில் இலங்கை அரசு நிரந்தர கடற்படைத் தளத்தை அமைத்துள்ளதாக இலங்கையிலிருந்து வெளியாகும் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிவுக்கு வந்த 2009-ம் ஆண்டு முதலே கச்சத்தீவில் நிரந்தர கடற்படை தளம் அமைக்க இலங்கை அரசு முயற்சித்து வந்தது. ஆனால் தமிழகத்தில் இதற்குத் தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் கச்சத்தீவின் மேற்குப் பகுதியில் மேட்டு நிலப்பரப்பில் நிரந்தர கடற்படை தளத்தை இலங்கை அரசு அமைத்துள்ளதாக வீரகேசரி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.இத்தளமானது சீன அரசால் வழங்கப்பட்ட டெண்ட் கொட்டகைகளால் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் கச்சத்தீவு கடற்பரப்பில் நிரந்தரமாக 2 கடற்படைக் கப்பல்களை நிறுத்தியும் வைத்துள்ளது இலங்கை அரசு.தமிழகத்துக்குச் சொந்தமான கச்சத்தீவை மீட்டே தீரவேண்டும் என்று தமிழகத்தில் ஒருமித்த குரல் எழும்பி வரும் நிலையில் நிரந்தர கடற்படை தளத்தை இலங்கை அரசு அமைத்துள்ளது மீனவர்களை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. 

No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...