|| கவிதமிழன் பக்கத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி!

25 March, 2012

மாற்றுத் திறனாளிகளுக்கு, ஏழு விதமான நலத் திட்டங்களை, அறிவித்தார் ஜெயலலிதா .


மாற்றுத் திறனாளிகளுக்கு, ஏழு விதமான நலத் திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:* ஆறு வயதிற்கு உட்பட்ட பார்வைத்திறன் குறைபாடு உடைய மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு, ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள், வேலூர், திருவண்ணாமலை, மதுரை, கிருஷ்ணகிரி மற்றும் நெல்லை ஆகிய, ஐந்து மாவட்டங்களில் இயங்கி வருகின்றன.இந்த மையங்களுக்கு, 2011-12ம் ஆண்டிற்காக, 22.90 லட்சம் ரூபாய்.* இதுபோன்ற பயிற்சி மையங்களை, சென்னை, கோவை, திண்டுக்கல் உட்பட, 20 மாவட்டங்களில் புதிதாக ஏற்படுத்தவும், ஒரு மையத்திற்கு, ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 500 ரூபாய் வீதம் நிதி ஒதுக்கீடு.* இரு கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, தற்போது இணைப்பு பொருத்தப்பட்ட மின்சார ஸ்கூட்டர்கள் வழங்கப்படுகின்றன. மாணவ, மாணவியர், பணிபுரியும் மாற்றுத் திறனாளிகள், பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கக் கோரியுள்ளனர். இதை பரிசீலித்த முதல்வர், நடப்பாண்டில், 2 கோடி ரூபாய் செலவில், 400 மாற்றுத் திறனாளிகளுக்கு, பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

* செவித் திறன் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் காதொலி கருவிகளுக்குப் பதில், 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அதிக திறன் வாய்ந்த காதொலிக் கருவிகள் வழங்கப்படும். நடப்பாண்டில், ஆறாம் வகுப்பு முதல், கல்லூரி வரை பயிலும், 1,000 மாணவர்களுக்கு, அதிக திறன்கூடிய காதொலிக் கருவிகள் வழங்கப்படும். இதற்காக, அரசுக்கு ஒரு கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

* தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உதவியுடன், 12 மாவட்டங்களில், தங்கும் விடுதியுடன் கூடிய தொழிற்பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதர, 20 மாவட்டங்களுக்கும், இத்திட்டத்தை விரிவுபடுத்த, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ஒரு மாவட்டத்திற்கு, 75 மாற்றுத் திறனாளிகள் வீதம், 2,400 மாற்றுத் திறனாளிகளுக்கு, இந்த மையங்கள் மூலம் தொழிற்பயிற்சி அளிக்கப்படும். இதற்காக, முதல்வர், 74.88 லட்சம் ரூபாய் நிதி 
ஒதுக்கீடு செய்துள்ளார்.


* மாற்றுத் திறனாளிகளுக்கு, மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம், தொழில் துவங்க 
கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு, 10 கோடி ரூபாய் வரை கடன் வழங்கப்பட்டுள்ளன. அதிகளவில் அவர்கள் தொழில் துவங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில், கடன்களுக்கான வட்டியை தமிழக அரசே ஏற்கும்.* மாற்றுத் திறனாளி குழந்தைகளை, ஆரம்பநிலை பயிற்சி மையங்களுக்கு அழைத்து வரவும், திரும்ப அழைத்துச் செல்லவும், அக்குழந்தைகளின் பாதுகாவலர்களுக்கு நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் பயணச் செலவு தொகையை, 20 ரூபாயில் இருந்து, 40 ரூபாயாக உயர்த்தப்படும். இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.தொழு நோயாளிகள் இல்லங்களைபுதுப்பிக்க ரூ.5.21 கோடி நிதி ஒதுக்கீடு:தொழு நோயாளிகளுக்கான மறுவாழ்வு இல்லங்களை புனரமைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, முதற்கட்டமாக பரனூர் அரசு மறுவாழ்வு இல்லத்தை புதுப்பிக்க, 1 கோடியே 61 லட்சத்து, 82 ஆயிரம் ரூபாயும்; யா.புதுப்பட்டி இல்லத்தை புதுப்பிக்க, 1 கோடியே 80 லட்சம் ரூபாயும்; புதுக்கோட்டை அரசு மறுவாழ்வு இல்லத்தை புதுப்பிக்க, 1 கோடியே 80 லட்சம் ரூபாயும் என, மொத்தம் ஐந்து கோடியே 21 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...